பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ‘நேரடிப் போர்’ அறிவிப்பு 200 பேர் பலி? : பதற்றத்தை தணிக்க சீனா, ரஷ்யா, ஈரான் தீவிரம்
காபூல், பிப். 27- பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த ஓராண்டு க்கு மேலாக பதற்றமான சூழல் நீடித்து வந்தது. ஆப்கானிஸ்தானில் செயல் பட்டு வரும் தெஹ்ரிக்-இ-தலிபான், பலூச் லிபரேஷன் ஆர்மி எனும் அமைப்பினருக்கும், பாகிஸ்தான் ராணு வத்துக்கும் இடையே தொடர்ந்து எல்லை யில் மோதல் நடந்து வந்தது. மேலும் பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் தற்கொலை படை தாக்குதல்கள் நடத்தப் பட்டன. இதன்பின்னணியில் ஆப்கா னிஸ்தான் இருப்பதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இதனை ஆப்கா னிஸ்தான் மறுத்து வந்தது.
குறிப்பாக கடந்த அக்டோபர் மாதத்தில் நடந்த மோதலில் இருதரப்பிலும் 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு எல்லைகள் அடிக்கடி மூடப்படுவ தால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் உறவு பாதிக்கப் பட்டுள்ளது. வான்வழித் தாக்குதல் இதற்கிடையே பிப்., 22ஆம் தேதி திடீரென பாகிஸ்தான் போர் விமானங்கள் திடீரென ஆப்கானிஸ்தானுக்கு சொந்த மான காந்தஹார், பாக்தியா மாகாணங்க ளில் உள்ள பகுதிகளில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு புதனன்று இரவு ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் அரசு பதிலடி கொடுத்தன. இரவில் எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
இதனால் பதற்றம் அதிகரித்தது. இதற்கிடையே தான் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே ‘நேரடி போர்’ தொடங்கி விட்டதாக பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் வியாழனன்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ‘ஆபரேஷன் கசாப் லில் ஹக்’ என்ற பெயரில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், காந்தஹார் மற்றும் பாக்தியா ஆகிய மாகாணங்களில் வான் வழித் தாக்குதல்களை பாகிஸ்தான் ராணு வம் தீவிரப்படுத்தியுள்ளது. 200 பேர் பலி? ஆப்கானிஸ்தானின் தலிபான் படைகள் பாகிஸ்தானின் ராணுவ நிலை களைக் குறிவைத்து டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளன. மேலும், 15க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவச் சாவடிகளைக் கைப் பற்றியதாகவும், 55 பாகிஸ்தான் வீரர்க ளைக் கொன்றதாகவும் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மறுப்பு ஆனால் தனது ராணுவச் சாவடிகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது.
மாறாக, சுமார் 133 தலிபான் வீரர்கள் கொல்லப்பட்ட தாகவும், 200 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் இருநாட்டின் நேரடி போர் அறிவிப்புக்கு பின்னர் 200 பேர் பலியாகி இருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. மத்தியஸ்தம் ஆப்கானிஸ்தான் நிலப்பரப்பில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்கு தலுக்கு இந்தியா கண்டனம் தெரி வித்துள்ளது. அதே நேரத்தில் சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய மூன்று நாடுக ளும் உடனடியாகப் போரை நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வலியுறுத்தியுள்ளன.
ரஷ்யாவும், ஈரானும் தேவைப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையே ‘மத்தியஸ்தம்’ செய்யத் தயார் என அறிவித்துள்ளன. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதல் குறித்து சீனாவின் வெளியுற வுத்துறை செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் கூறுகையில்,’’பழிவாங்கும் தாக்குதல்கள் எதற்கும் தீர்வாக அமையாது. இரு நாடுகள் இடையேயான மோதலை தணிக்க மத்தியஸ்தம் செய்யவும், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை நடத்த தயாராக இருக்கிறோம்’’ என்று கூறியுள்ளார். ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தரப்பில்,’’ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உடனடியாக தாக்குதல்க ளை நிறுத்த வேண்டும்.
கருத்து வேறுபாடு களைத் தீர்க்க வேண்டும்’’ என்று கூறி யுள்ளது. ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “இரு நாடுக ளுக்கும் இடையே பேச்சுவார்த்தையை எளிதாக்கி, புரிதலையும், ஒத்து ழைப்பையும் மேம்படுத்த வேண்டும். இதற்கு தேவையான அனைத்து உதவி களையும் வழங்க ஈரான் தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் யவெட் கூப்பர் ஆகியோர் நிலைமை மோச மடைவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
