world

img

நியூசிலாந்தில் 15 மாதங்களுக்கு பின் மீண்டும் ஊரடங்கு

நியூசிலாந்தில் 15 மாதங்களுக்கு பின் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
கடந்த 6 மாதமாக நியூசிலாந்தில் கொரோனா பரவல் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் ஓக்லாந்தை சேர்ந்தவருக்கு கடந்த வாரம் டெல்டாவகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஆகஸ்ட் 7 ம் தேதி சிட்னியில் இருந்து வந்த ஒருவரிடமிருந்து கொரோனா பரவியது ஆய்வில் தெரியவந்தது.
நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பரவல் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
இதுகுறித்து ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த நபர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். ஆனால் அச்சப்பட்டது போல் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை. இந்நிலையில் ஒரே இரவில் 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நாடு தழுவிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்று அழிக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.