world

img

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்  

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.4ஆக பதிவாகி உள்ளது.  

ஜப்பான் தென்மேற்கு மற்றும் மேற்கு பகுதியில் கியூஷூ தீவு பகுதி அருகே இன்று அதிகாலை 1 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 40 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.    

ஜப்பானிய மியாஜகி, ஒய்டா, கொச்சி மற்றும் கும்மோட்டோ ஆகிய மாகாணங்களில் 5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.   நிலநடுக்கத்தின்போது சுமார் 15 வினாடிகள் நிலஅதிர்வு ஏற்பட்டதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்தது. இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை.  

இந்த நிலநடுக்கத்தால் 13 பேர் காயமடைந்தனர். 80 வயது வயதுக்கு மேற்பட்ட 2 பேர் படுகாயமடைந்தனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கட்டிடங்கள், நீர் குழாய்கள் மற்றும் சாலைகளுக்கு சேதம் ஏற்பட்டதாக பல அறிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.