இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலான நிலையில், 3 இஸ்ரேலியர்களை ஹமாஸ் விடுதலை செய்தது; தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்ட 90 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.
பதினைந்து மாத கால இஸ்ரேலின் கொடிய தாக்குதலுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19, 2025) உள்ளூர் நேரப்படி காலை 8:30 மணிக்கு போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்க மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட இந்த ஒப்பந்தம், காசாவில் கடுமையான அழிவுகளை சந்தித்த மக்களுக்கு நம்பிக்கை ஒளியாக அமைந்துள்ளது. இந்த நிலையில், 3 இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்தது. இதனை தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்ட 90 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் ராணுவம் விடுதலை செய்துள்ளது. விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களில் அரசியல் தலைவர் கலிதா ஜரார் மற்றும் பத்திரிகையாளர் ருலா ஹசனைன் ஆகியோர் அடங்குவர்.
காசா மீது இஸ்ரேல் கடந்த 15 மாதங்களாக நடத்திய தாக்குதலில், இதுவரை 46,900 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.