world

img

4 லட்சம் பாலஸ்தீனர்கள் தண்ணீரின்றி பலியாகும் அபாயம்

4 லட்சம் பாலஸ்தீனர்கள்  தண்ணீரின்றி பலியாகும் அபாயம்

இரண்டு வாரங்களாக மருந்து, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களை இஸ்ரேல் ராணுவம் தடை செய்துள்ளது. இதனால் வடக்கு காசா வில் உள்ள 4,00,000 பாலஸ்தீனர்கள் பட்டினியில் தள்ளப் பட்டுள்ளனர். இத னால் அதிக மக்கள் உயிர்ப் பலியாகும் அபாயம் ஏற்பட்டுள் ளது என ஐரோப்பிய – மத்திய தரைக் கடல் மனித உரிமை கள் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. வடக்கு காசாவில் சுமார் 2, 00,000 பாலஸ்தீனர்கள் பத்து நாட்க ளாக உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை:  ஈரான் நிராகரிப்பு 

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி ஓமான் அரசின் உதவியுடன் அமெரிக்காவுடன் நடை பெறும் பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதாக அறிவித்துள் ளார். இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்த  துவங்கிய பிறகு பிராந்தியம் முழுவ தும் போர் பரவி விடக் கூடாது. ஈரானும் அமெரிக்காவும் போ ரில் இறங்கிவிடக் கூடாது என இரு நாட் டுக்கும் இடையே ஓமன் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. தற்போது போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் பேச்சுவார்த்தையை ஈரான் நிராகரித்துள்ளது.

ஈரான் மீது தாக்குதல்  இஸ்ரேல்  தயார்?

ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஒரு முழுமையான திட்டத்திற்கு இஸ்ரேல்  வந்துள்ள தாகக் கூறப்படுகிறது. அந்த திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சரவையின் இறுதி ஒப்புதல் தேவை என இஸ் ரேல் அரசு செய்தித் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. ஈரானின் எண் ணெய், அணுசக்தி நிலையங்களை தாக்க மாட்டேன்  என இஸ்ரேல்  பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் உறுதி கொடுத்ததாக கூறப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய  பணக்கார நகரம் அபுதாபி

அரசு மேற்கொள்ளும் முதலீட்டு நிதி மூலம் பெரும் வருவாய் அடிப்படையில் உலகிலேயே மிகப் பெரிய பணக்கார நகரமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி அறிவிக்கப் பட்டுள்ளது. நடப்பு அக்டோபர் மாத நிலவரப்படி அபு தாபி அரசு 1.7 டிரில்லியன் அமெ ரிக்க டாலர் முதலீடு களை பெற்று இந்த முதலிடத்தை பிடித்துள்ளதாக  எஸ்.டபிள்யு.எப் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மிக வேகமாக வளரும் நகரமாக அபுதாபி உள்ளது குறிப் பிடத்தக்கது.