இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
இஸ்ரேலுக்கு ஈரான் சரியான நேரத்தில் பதிலடி கொடுக்கும் என ஈரானின் வெளி விவகாரங்களுக்கான துணை ஜனாதிபதி முகமது ஜாவத் ஜரீப் எச்சரித்துள்ளார்.
நஸ்ரல்லாவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஹிஸ்புல்லா தலைவரை கொலை செய்த பிறகு எப்போது வேண்டுமானாலும் ஈரான் நேரடியாக போரில் இறங்கும் என கூறப்படுகிறது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது போர் தொடுக்க அமெரிக்காவும் தாயாராக உள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.