world

img

அமெரிக்காவின் சலுகையை நிராகரித்த ஈரான்!

சர்வதேச சந்தைக்குக் கூடுதல் கச்சா எண்ணெயை வழங்குவதற்குத் தங்களிடம் கையிருப்பு ஏதுமில்லை என ஈரான் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவம் இணைந்து ஈரான் நாட்டின் மீது கொடூரத் தாக்குதல்களை மேற்கொண்டது. இதை தொடர்ந்து, ஈரான் பதிலடியாக இஸ்ரேல் மீதும், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், சர்வதேச எண்ணெய் கப்பல் போக்குவரத்து நடைபெறும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இந்த போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உலகளவில் எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த கடலில் முடங்கியுள்ள ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை 30 நாட்களுக்கு நீக்குவதாக அமெரிக்கா அறிவித்தது. இந்த நிலையில், இந்த சலுகையை நிராகரித்த ஈரான் அரசு, சர்வதேச சந்தைக்குக் கூடுதல் கச்சா எண்ணெயை வழங்குவதற்குத் தங்களிடம் கையிருப்பு ஏதுமில்லை என தெரிவித்துள்ளது.