புதுச்சேரியில் 205 பேர் வேட்பு மனுத் தாக்கல்
புதுச்சேரி: புதுச்சேரி, அசாம், கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஏப்ரல் 9 அன்று தேர்தல் நடை பெற உள்ள நிலையில், மார்ச் 23 (திங்கட்கிழமை) அன்று வேட்பு மனுத்தாக்கல் கடைசி நாளாக இருந்தது. மாலை 3 மணிக்குள் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலையில் வேட்பாளர்கள் கூட்டமாக திரண்டதால் நீண்ட வரிசை உருவானது. கூட்ட நெரிசலை தவிர்க்க தேர்தல் துறை ‘டோக்கன்’ முறை பின்பற்றப்பட்டது. மதியம் 1 மணி நிலவரப்படி மொத்தம் புதுச்சேரியில் 205 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீட்டை முன்கூட்டியே முடித்திருந்ததால் அவர்களது 12 வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்துவிட்டனர்.
காங்கிரஸ்-திமுக கடைசி நேர உடன்பாடு
நீண்ட இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்து, புதுச்சேரி யில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், திமுக 12 தொகுதி களிலும் போட்டியிட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மீத முள்ள 2 தொகுதிகளில் விசிக மற்றும் சிபிஐ தலா ஒரு தொகுதியில் போட்டியிடும். இந்தியா கூட்டணியில் அங்கும் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பி னர் வைத்தியலிங்கம், முதல்வர் ரங்கசாமி போட்டியிடும் தட்டாஞ்சாவடி தொகுதியில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தட்டாஞ்சாவடி மற்றும் உழவர்கரை தொகுதியில் தொகுதி முடிவு செய்யும் முன்பே வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
உள்ளாட்சி மன்றத் தேர்தலையும் நடத்தக் கோரிய மனு தள்ளுபடி
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுடன் இணைத்து உள்ளாட்சி மன்றத் தேர்தலையும் நடத்த வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திருவள்ளூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகுமரன் தாக்கல் செய்த இந்த மனு விசாரணைக்கு வந்தது. சட்ட மன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளி யிடப்பட்டுள்ளதால் மனுவை வாபஸ் பெறுவதாக மனு தாரர் தெரிவித்தார். இதையடுத்து அந்த மனுவை நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்று மனுதாரருக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.
சுயேச்சையுடன் கூட்டணி அமைத்த தவெக
புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்துடன் ‘நேயம் மக்கள் கழகம்’ கூட்டணி அமைத்துள்ளது. முதலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்த தமிழக வெற்றிக் கழகம், 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதற்கிடையில் நேயம் மக்கள் கழ கத்தின் தலைவர் நேரு (எ) குப்புசாமி, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் அறி வித்திருந்த 30 தொகுதிகளில் உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு தொகுதிகள் நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நேரு என்ற குப்புசாமி கடந்த முறை நடந்த சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்த முறையும் எந்தக் கட்சிகளும் சீட்டு வழங்க முன்வரவில்லை. இத னால், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து உள்ளார்.
காலையில் பாஜக, இரவில் தவெக வேட்பாளர்
புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜகவிலிருந்து விலகிய சாய் சரவணன்குமார், அதே நாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சாய் சரவணகுமார், கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டி யிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு இந்த முறை பாஜகவில் சீட்டு வழங்கவில்லை. அதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை பாஜக கட்சியில் இருந்து விலகிய அவர், அன்றைய இரவே திருபுவனை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாள ராக அறிவிக்கப்பட்டார். சாய் சரவணகுமார் கடந்த 2021 சட்டமன்றத் தேர்த லில் பாஜக சார்பில் வெற்றி பெற்று, 2025 ஜூன் மாதம் வரை முதலமைச்சர் ரங்கசாமியின் அமைச்சர வையில் அமைச்சராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்.9-இல் பொது விடுமுறை
புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 9 ஆம் தேதி பொது விடு முறையாக அறிவிக்கப் பட்டுள்ளது. அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் அனைத் தும் மூடப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் தனியார் நிறு வனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர் களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங் கப்பட வேண்டும் என்று தொழிலாளர் துறை அறிவுறுத்தியுள்ளது. அன்றைய தினம் மதுக் கடைகளும் மூடப்படும்.
‘கற்பனை’ கலகம்: தேமுதிக மறுப்பு
சென்னை: “திமுக கூட்டணி பேச்சுவார்த் தைக்கு தேமுதிகவை அழைக்கவில்லை” என்பது வதந்தி மட்டுமே என்று தேமுதிக மறுத் துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் பேச்சு வார்த்தை நடக்கும் என்றும், 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், புதன் கிழமை அறிவிப்பு வெளி யாகும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. “கூட்டணி வெல்ல வேண்டும் என்றால் சில தொகுதிகளை விட்டுக் கொடுக்க தேமுதிக தயா ராக இருக்கும்” என்று பிரேமலதா விஜயகாந்த் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.