பட்டா வழங்காததை கண்டித்து போராட்டம்
நாமக்கல், மார்ச் 23- 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்புகளுக்கு பட்டா வழங்காததை கண்டித்து கிராம மக்கள் கண்க ளில் கருப்பு துணி கட்டியும் பாடை கட்டி ஒப்பாரி வைத் தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த ஆவத்திபாளையம் அண்ணாநகர் பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். வீட்டு வரி, மின்சார கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் செலுத்தி வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு தற்போது வரை வீட்டு மனைக் கான பட்டா வழங்கப்படவில்லை. இது தொடர்பாக முதல்வரின் தனி பிரிவு, உங்களுடன் ஸ்டாலின், மக்களுடன் முதல்வர் ஆகிய முகாம்களிலும் பட்டா வழங்கக் கோரி மனு அளித்தனர். அதேபோல பல கட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனை யடுத்து கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பொது மக்களின் போராட்டதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் வருவாய் துறை சார்பில் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. ஆனாலும் அதன் பிறகும் பட்டா வழங்க எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து, களியனூர் கிராம நிர்வாக அலுவலகத்தை திங்களன்று முற்றுகையிட்ட பொது மக்கள், கண்களில் கருப்பு துணி கட்டியும் பாடை கட்டி ஒப்பாரி வைத்தும் பட்டா வழங்கக் கோரி கோஷம் எழுப் பினர். பெருமாள் கோவிலுக்குரிய இடத்தில் பொது மக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு கோவில் தரப்பிலி ருந்து எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கப்படாத நிலையிலும் இன்னும் அவர்களுக்கான பட்டா வரு வாய் துறையால் வழங்கப்படவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.
