tamilnadu

img

மனோரஞ்சன் தாலுக்தார், சிபிஐ (எம்) பவானிபூர் - சர்போக் தொகுதி வேட்பாளர், அசாம்.

அசாமில் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமானது. பாரதிய ஜனதா கட்சியைத் தோற்கடிப்பதற்காக ஐந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உறுதியுடன் களம் இறங்கியுள்ளோம். ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான அரசு, தோல்விகளை மறைக்கத் தொடர்ந்து வகுப்புவாத நச்சுக் கருத்துகளைப் பரப்பி வருகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இலக்கு வைப்பதன் மூலம் மாநிலத்தின் ஒற்றுமை குலைக்கப்பட்டு, ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விலைவாசி உயர்வு, வெள்ளப் பாதிப்பு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனைகளை முன்வைத்து, ஒரு மாற்று ஜனநாயக மதச்சார்பற்ற அரசாங்கத்தை அமைப்பதே இந்தத் தேர்தலின் நோக்கம். இந்த அரசு வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன.