► கணினிகளில் கடந்த 27 ஆண்டுகளாக இணைய சேவையை வழங்கி வந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோ ரர், கூகுள் க்ரோம், ஃபயர் பாக்ஸ் உள்ளிட்ட பிரவுசர் களின் வளர்ச்சியால், படிப்படியாக பயன்பாட்டி லிருந்து விலகியது. இதை யடுத்து ஜூன் 15ஆம் தேதி முதல் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தனது சேவையை நிறுத்தி கொண்டது.
► இந்தியாவிலிருந்து வரும் கோதுமையை ஏற்றுமதி, மறு ஏற்றுமதிக்கு தடை விதிக்க ஐக்கிய அரபு அமீ ரகத்தின் பொருளாதார அமைச்சரகம் உத்தர விட்டுள்ளது. சர்வதேச நிலவரங்களால் ஏற் பட்டுள்ள வர்த்தகச்சூழ லை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எனத் தகவல் வெளியாகியுள் ளது.
► மக்கள் நலப் பணியாளர் களை மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட் டத்தில் ஒருங்கிணைப் பாளராக பணியமர்த்த தமிழக ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது.
► இந்தியாவின் கங்கை சம வெளி பகுதிதான் உலகி லேயே மிக மோசமான மாசடைந்த பகுதியாக உள்ளதாக, அமெரிக்கா வின் சிகாகோ பல்கலை., ஏர் குவாலிட்டி லைஃப் இன்டெக் (ஏகியூஎல்ஐ) அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள் ளது. மேலும் அதிக மாசு கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
► தேசிய, சர்வதேச போட்டி களின்போது வீராங்கனை களுடன் பெண் பயிற்சி யாளர் கட்டாயம் செல்ல வேண்டுமென இந்திய விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் உத்தர விட்டுள்ளது.
► முப்படைகளில் இளை ஞர்கள் தற்காலிகமாகப் பணி புரிவதற்கான ‘அக்னிபத்’ திட்டத்தை உரிய ஆய்வுகளுக்குப் பின், சோதனை முறை யில் செய்த பிறகே முழு வீச்சில் நடைமுறைப் படுத்த வேண்டும் என்று மூத்த ராணுவ அதிகாரி கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
► தமிழகத்தில் திட்டமிட்ட படி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17 அன்று வெளியாகும் என்று தேர்வுத்துறை அதி காரிகள் தெரிவித்துள்ள னர். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாண வர்கள் www.dge.tn.gov. in, www.tnresults.nic.in ஆகிய இணையதளங் களில் தங்களின் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
► விசா முறைகேடு வழக்கு வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மேல் முறையீடு மனு விசார ணையை ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
► துருக்கி என்பதை துர்க்கியே என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதால், அந்நாட்டின் விமான சேவை நிறுவனத்தின் பெயரையும் மாற்றுகிறார்கள். துருக்கி ஏர்லைன்ஸ் என்று தற்போதுள்ள பெயரை துர்க்கியே ஏர்லைன்ஸ் என்று எழுதப் போகிறார்கள். இதை அந்நாட்டின் ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார். பெயர் மாற்றத்தை உலகுக்கு அறிவிக்கும் ஒன்றாகவும் துர்க்கியே விமான சேவை நிறுவனம் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
► நவம்பர் 1, 2022 முதல் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நமக்குக் கிடைக்காது என்று செர்பியா வின் ஜனாதிபதி அலெக்சாண்டர் உசிச் விரக்தியுடன் கூறியுள் ளார். ஒவ்வொரு நாளும் புதிது புதிதாகப் பிரச்சனைகள் உரு வாகி வருகின்றன என்று குறிப்பிட்ட அவர், குளிர் காலத்தில் ஏழு மடங்கு அதிகமாக செலவழிக்க வேண்டியிருக்கும். நவம்பர் 1 ஆம் தேதிக்குள் இன்னும் என்னென்ன புதிய தடைகள் வரப் போகின்றன என்று தெரியவில்லை எனப் புலம்பியிருக்கிறார்.
► மேற்கு ஆசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு வரும் வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ, கத்தார் வந்தடைந்தார். இதற்கு முன்பாக, துர்க்கியே, அல்ஜீரியா, ஈரான் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு சென்ற அவர், அந்த நாடுகளுடன் பல்வேறு உடன்பாடுகளில் கையெழுத்திட்டார். இவருடைய பயணத்தில் வெனிசுலாவின் போக்குவரத்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விவசாயம், நிலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்றிருக்கிறார்கள்.