லெபனான் மீது 1000 க்கும் மேற்பட்ட முறை தாக்குதல்
2024 நவம்பர் 27 அன்று லெபனா னுடனான தற்காலிக போர் நிறுத்தம் அமலான பிறகு ஒப்பந்தத்தை மீறி சுமார் 1,000 க்கும் மேற்பட்ட முறை இஸ்ரேல் ராணுவம் லெபனான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதுவரை 45 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இஸ்ரேல் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தொடர்ந்து ஒப்பந்தத்தை மீறினால் மீண்டும் லெபனான் இஸ்ரேலுக்கு இடையே போர் வெடிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் தாக்குதல் நடத்த திட்டமிடும் துருக்கி?
சிரியாவில் உள்ள குர்திஸ்தான் அமைப்பி னர் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஹரியேட் என்ற செய்தி நிறு வனம் தெரிவித்துள்ளது. குர்திஸ்தான் அமைப் பினருடனான சிரிய அதிகாரிகள் நடத்தி வரும் பேச்சுவார்த்தை தோல்வியுறும் பட்சத்தில் இந்த தாக்குதல் நடக்கும் என கூறப்படுகிறது. பயங்கர வாதிகள் சிரியாவை கைப்பற்றிய பிறகு அமெ ரிக்கா, இஸ்ரேல் உடன் இணைந்து சிரியாவின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க துருக்கி திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் ஆட்சியை கவிழ்க்க எலான் மஸ்க் திட்டம்?
இங்கிலாந்தில் கெய்ர் ஸ்டார்மரை பிரதமர் பதவியில் இருந்து அகற்றுவதற்காக எலான் மஸ்க் திட்டமிடுவதாக தி பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக தீவிர வலதுசாரியான இங்கிலாந்து சீர்திருத்த கட்சி ( Reform UK ) உள்ளிட்ட வலதுசாரிகளுடன் மஸ்க் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அவரது ஆட்சியை கவிழ்ப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் பேசியுள்ளதாகவும் அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
2025 முதல் வாரத்தில் 74 குழந்தைகள் படுகொலை
2025 துவங்கிய முதல் வாரத்தில் சுமார் 74 பாலஸ்தீன குழந்தைகளை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்துள்ளது என ஐ.நா. குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது. மேலும் ஜனவரி 7 அன்று காசா முழுவதும் 50 பாலஸ்தீனர்களை படுகொலை செய்துள்ளது. ஐ.நா. நிவாரண வாகனங்களை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தடுத்து வரும் நிலையில் எரிபொருள் இல்லாமல் 3 மருத்துவமனைகள் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிரான கருத்துக்கு ‘மெட்டா’ அனுமதி
தன்பாலின ஈர்ப்பாளர்கள் (பால்புதுமையினர்) மீது அவதூறு பரப்பும் வகையில் மெட்டா நிறுவனம் விதிகளை மாற்றியுள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் சமூக ஊடகங்களான முகநூல், த்ரெட்ஸ், இன்ஸ்டா கிராம் ஆகியவற்றில் பால்புதுமையினர், திருநர் உள்ளிட்டவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என வும் இன்னும் பல மோசமான கருத்துகளையும் உலகம் முழுவதும் பலர் பதிவிட்டு வருகிறார்கள். ஏற்கனவே முறையற்ற கொள்கையால் மெட்டா நிறுவன ஊடகங்க ளை பயன்படுத்தும் லட்சக்கணக்கான பெண்கள் பாலி யல் வன்முறைகளை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பரவும் காட்டுத் தீ : லாஸ் ஏஞ்சல்ஸில் அவசரநிலை அறிவிப்பு
லாஸ் ஏஞ்சல்ஸ், ஜன.9- அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத் தில் உள்ள மிக முக்கியமான நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் காட்டுத்தீ மிக மோசமாகவும், வேகமாகவும் பரவி வரு கின்றது. இந்த காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காட்டுத் தீ ஹாலிவுட் நிறுவனத் தின் குறியீடாக விளங்கும் ஹாலிவுட் மலை கள் வரை வேகமாக பரவி வருகிறது. தீ பரவி வரும் தீவிரத்தை உணர்ந்து கலி போர்னியா மாநில கவர்னர் அம்மாநிலத்தில் அவசரநிலையை அறிவித்துள்ளார். தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி ஹாலிவுட் மலைப்பகுதியில் ரன்யான் கன்யோன் முதல் வாட்டலஸ் பார்க் வரையிலான மலைப்பகுதி காட்டுத் தீயில் எரிந்துள்ளது. ஹாலிவுட் நிறு வனத்தின் முக்கியமான கட்டடம் அமைந் துள்ள இடம் மட்டுமின்றி , ஆஸ்கார் விருது கள் வழங்கும் விழா நடைபெறும் டோல்பி தியேட்டரும் இந்த காட்டுத் தீயில் பாதிக் கப்படும் என கூறப்பட்டுள்ளது. துவக்கத்தில் அப்பகுதியில் இருந்து முப்பதாயிரம் மக்களை வெளியேற உத்தரவிட்டிருந்த அரசாங்கம் தற்போது 1,37,000 க்கும் அதிகமான மக்களை வெளி யேற்றியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அதனைச் சுற்றி யுள்ள ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ பரவி வருகின்றது. லாஸ் ஏஞ்செல்ஸ் பகுதியில் உருவான காட்டுத் தீயிலேயே மிக மோசமான காட்டுத்தீயாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீ காரணமாக 15 லட்சத் திற்கும் அதிகமான மக்களுக்கான மின்சாரத் தேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அதே போல், வெண்டியுரா கவுண்டி என்ற பகுதி யில் சுமார் 3,34,000 மக்களும், லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் 9,57,000 மக்களும் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜோபைடன் தீயை கட்டுப்படுத்துவதில் முறையாகச் செயல் படவில்லை. தீயணைப்பு நடவடிக்கைக்கு தேவையான போதிய வாகனங்களும் பணமும் இல்லாமல் நாட்டை (அத்துறை யை) என்னிடம் கொடுத்துச் செல்கிறார் என அவரை டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்.