world

img

தீக்கதிர் உலக செய்திகள்

அதானியுடனான ஒப்பந்தத்தை  ரத்து செய்த கென்யா

அதானி நிறுவனத்துடன் கடந்த மாதம்   கையெழுத்தான விமான நிலைய விரிவாக்கம் மற்றும் எரிசக்தி ஒப்பந் தங்களை ரத்து செய்வதாக கென்யா ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ அறிவித்தார்.முன்னதாக சில வாரங் களாக அந்நாட்டு மக் கள் அதானிக்கு விமான நிலையத்தை கொடுக் கக் கூடாது என தனி யார் மயத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக் கது. இந்நிலையில் அதானி மீதான அமெரிக்காவின் குற்றச் சாட்டை தொடர்ந்து அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சகம் மற்றும் எரிசக்தி மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கு  உத்தரவிட்டதாக ரூட்டோ குறிப்பிட்டுள்ளார்.

கெட்டுப்போன உணவு : பாலஸ்தீனர்களை  மரணத்தில் தள்ளும் இஸ்ரேல் 

காசாவிற்குள் இஸ்ரேல் ராணுவம் கொண்டு செல்லும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் கெட்டுப் போன பிறகு பாதிக்கப் பட்ட மக்கள் உள்ள பகு தியில் தூக்கி எறிந்து விட்டு சென்று விடுகின் றனர். கடுமையான பசியில் உள்ள பாலஸ் தீனர்கள் அந்த கெட்டுப்போன உண வுப்பொருட்களை சாப்பிட்டு மிக மோசமான வயிற்றுப் பிரச்சனைகளுக்கு  (Food Poison) உள்ளாகி வருகின்றனர். சமீபத்தில் குழந்தைகள் பெண்கள்  என  15 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக காசா பகுதியில் உள்ள மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.