world

img

அதானி உடனான ஒப்பந்தம் இலங்கை, வங்கதேசத்தில் வெடிக்கும் ‘பூகம்பம்’

டாக்கா/கொழும்பு,நவ.22- அதானி மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டை தொடர்ந்து  அந்நிறுவனத்து டன் ஒப்பந்தம் செய்துள்ள இலங்கை மற்றும் வங்கதேசத்தில் பெரும் பூகம்பமே வெடித்துள்ளது. இலங்கை அரசின்  கடந்த ஆட்சியில் அதானியுடன்  சூரிய மின் உற்பத்தி  ஒப்பந்தம் ஏற்படுத்தியதைச் சுட்டிக்காட்டி தற்போதைய அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என இலங்கை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் கோத்தபய ராஜபக்சே ஆட்சியில் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தியதில் இருந்தே தொடர் விமர்சனங்களும் குற்றச் சாட்டும் எழுந்து வருகின்றது. இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் பூனேரியில் காற் றாலை மின் திட்டத்தில் அதானி கிரீன் எனர்ஜி சுமார் 3,700 கோடி ரூபாய்க்கும் ($442 மில்லியன் டாலர்) அதிகமாக முதலீடு செய்துள்ளது. இதற்கான டெண்டர்களுக்கு வெளிப்ப டையாக அழைப்பு கொடுத்து நடத்தவில்லை, பின்கதவு வழியாக அதானி இலங்கைக்குள் நுழைந்துள்ளார் என்ற குற்றச்சாட்டை  பல அரசியல் கட்சிகள் முன்வைத்தன. 2022 இல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே வுக்கு அழுத்தம் கொடுத்ததை தொடர்ந்தே அதானி குழுமத்திற்கு இந்தத் திட்டம் வழங்கப் பட்டதாக இலங்கை மின்சார சபையின் (CEB) உயர் அதிகாரி ஒருவர் நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்தார். பின்னர் அந்த அதி காரி தனது   அறிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டு ராஜினாமா செய்தார்.  ஊழல் குற்றச்சாட்டு நிறைந்த இந்த திட்டத்தை 2023 இல் அமைந்த ரணில் விக்ர மசிங்க நிர்வாகம் முறையான விசாரணை இன்றி முன்னெடுத்தது. மேலும் இலங்கை அரசு தனியார் நிறுவனத்துடன் ஏற்படுத்திய இந்த ஒப்பந்தத்தை அரசுக்கும் - அரசுக்கும் இடையேயான ஒப்பந்தமாகவே ரணில் விக்ரமசிங்க அரசு கருதுகிறது என அவரது அவையில் அங்கம் வகித்த முன்னாள் வெளி யுறவுத்துறை  அமைச்சர் அலி சப்ரி கடந்த காலத்தில் குறிப்பிட்டுள்ளார். 

வங்கத்திலும் சர்ச்சையை  கிளப்பிய ஒப்பந்தம் 

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியின் போது அதானி நிறுவனம் மின்சாரம் உற் பத்தி செய்து கொடுக்க ஒப்பந்தம் போட்டது. அப்போதே வங்கதேசத்தில் இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இலங்கை போல வங்கத்திலும் மின் உற்பத்திக்கான  டெண்டர் முறையாக நடைபெறவில்லை. கிட்டத்தட்ட நேரடியாகவே அதானிக்கு ஹசீனா அரசு இந்த டெண்டரை வழங்கியதாக கூறப்படு கிறது. 

அரசா? தனியாரா?   

கொழும்பை தளமாகக் கொண்ட பொரு ளாதார பத்திரிகை (Economynext) செய்தி இணையதளத்தின் ஆலோசகர் ஆசிரியர் ஷிஹார் அனீஸ்  “ஆரம்பத்தில் இருந்தே அதானியின் சூரிய மின் உற்பத்தி திட்டம் இந்தியா - இலங்கை அரசாங்கத்திற்கு இடை யிலான ஒப்பந்தமா அல்லது தனியார் துறை முதலீடா என்பதில் தெளிவின்மை உள்ளது. கடந்த நாடாளுமன்றத்தில் இது குறித்து கார சாரமான விவாதங்கள் நடந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.   வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்ச கம் அதானி நிறுவனம் குறித்து எந்த கருத்தை யும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஆனால் பெயர் தெரிவிக்காத சில அதிகாரி கள்  இந்தியா - வங்கதேசம் அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் மின்  விநியோகம் நடக்கிறது. தேவை ஏற்படாத வரை தனியார் நிறுவனத்திடம் தலையிடும் அவசியம் எழாது என தெரிவித்துள்ளனர்.   வங்கதேசத்தில் உள்ள நிலக்கரி பற்றாக் குறையை சமாளிக்க ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தோனேசியா வழியாக அதானி நிறுவனமே நிலக்கரி கொண்டு வருகிறது. அதற்காக மிக அதிக கட்டணத்தை அதானி நிறுவனம் வசூலிப்பதாகவும் அந்நாடு குற்றம் சாட்டி இருந்தது. இதன் அடிப்படை யில் தான் வங்கதேச அரசால் மின்சாரத் திற்கு பணம் செலுத்த முடியாத சூழல் எழுந்தது. அதானி நிறுவனமும் மின்சாரம் வழங்குவதை நிறுத்தப் போவதாக மிரட்டியது. இந்தச் சூழலில் அதானி குழுமத்துட னான 1,600 மெகாவாட் மின்சார ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை நடத்த டாக்கா உயர் நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் உத்தர விட்டிருந்தது. தற்போது அதானி லஞ்ச விவகாரம் வங்கதேசத்திலும் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வங்கதேச மும் அதானி குழும ஒப்பந்தத்தை மறுபரி சீலனை செய்ய உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.