அந்தமான் நிகோபர் தீவில் இன்று ஒரே நாளில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தமான் நிகோபர் தீவில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானது.
அதனைதொடர்ந்து தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், அந்தமான் நிகோபர் தீவில், கேம்ப்பெல் பே என்ற பகுதியில் இருந்து வடகிழக்கே 70 கி.மீ. தொலைவில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.6 ஆக பதிவாகி உள்ளது.
மேலும் இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.