world

img

ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை...  

பாரீஸ்
உலகின் அதிபயங்கர தீவிரவாத அமைப்புகளும் ஒன்றான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு அடிக்கடி அதிர்ச்சிகாரமான தாக்குதலை நடத்துவது வழக்கம். இந்த அமைப்பு நடத்தும் தாக்குதல்களில் அதிக உயிர் மற்றும் பொருட்சேதாரம்  ஏற்படும். இந்த அமைப்பை ஒழிக்க உலக நாடுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன.  

இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான அத்னான் அபு வாலித் அல்-சஹ்ராவியை பிரான்ஸ் அதிரடி சஹாராவில் சுட்டுக்கொன்றது. இந்த அறிவிப்பை பிரான்ஸ் ஜனாதிபதி  இமானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ளார்.  
சுட்டுக்கொல்லப்பட்ட அபு வாலித் மாலி, நைஜர் மற்றும் புர்கினா பாசோ  ஆகிய பகுதிகளில் நடைபெற்ற  தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஆவார்.  இவரை பிடிக்க அமெரிக்கா 5 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் எனஅறிவித்திருந்த நிலையில் பிரான்ஸ் நாட்டின் அதிரடி படை  அபு வாலித்தின் கதையை முடித்தது.