world

img

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து முதலிடம்!

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 8ஆவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. 

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஐ.நா. நிலையான வளர்ச்சி தீர்வுகள் அமைப்புடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நல்வாழ்வு ஆராய்ச்சி மையம் மீண்டும் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. அதில், உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 8ஆவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. 

டென்மார்க், ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 118ஆவது இடத்தை பிடித்துள்ளது.

அடுத்தவர் மீது அக்கறை செலுத்துவது, மற்றவர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்ளுதல், மற்றவர்கள் மீதான நம்பிக்கை, எதிர்காலத்தின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து உதவிகளைப் பெறுவது உள்ளிட்டவை மக்களின் சந்தோஷத்திற்கான காரணங்களாக இது குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.