world

img

முன் அனுபவம் இல்லாத சாமானியர்கள் விண்வெளிக்குப் பயணம் 

கேப் கெனவெரல் : அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் எலன் மஸ்க்கின், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம், முன் அனுபவம் இல்லாத நான்கு அமெரிக்கர்களை முதன் முறையாக விண்வெளி சுற்றுலாவுக்கு வெற்றிகரமாக அனுப்பியது.

சில நாட்களுக்கு முன் , , ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் மற்றும்  அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் உள்ளிட்ட கோடீஸ்வர தொழிலதிபர்கள், விண்வெளி சுற்றுலா திட்டத்தை  வெற்றிகரமாகச் செயல்படுத்தினர்.இந்த வரிசையில் தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவன அதிபர் எலன் மஸ்க், பல ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார் . 

இந்த ஆராய்ச்சியின் கீழ் , முன் அனுபவம் இல்லாத நான்கு அமெரிக்கர்களை விண்வெளி பயணத்திற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நேற்று அனுப்பி வைத்தது . 

அமெரிக்காவின் 'ஷிப்ட் 4 பேமன்ட்ஸ்' நிறுவனத்தின் தலைவர் ஜார்ட் ஐசக்மேன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு விண்வெளி பயணத்தை மேற்கொண்டுள்ளது . மேலும் , இவர்கள் பயணம் செய்த விண்கலத்துக்கு, 'இன்ஸ்பிரேஷன் -- 4' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

புளோரிடாவில் உள்ள கேப் கெனவெரல் விண்வெளி தளத்திலிருந்து நேற்று காலை 5:32 மணிக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 'பால்கன் என் - 9' என்ற ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. இந்த ராக்கெட் விண்ணில் பாய்ந்த 12 நிமிடங்களில் அதன் இரண்டாவது அடுக்கு தனியாகப் பிரிந்து, வெற்றிகரமாகப் புவியின் நீள்வட்டப் பாதைக்குள் நுழைந்தது.
'பூமியிலிருந்து 575 கி.மீ., உயரத்தில் இந்த விண்கலம் அடுத்த மூன்று நாட்களுக்குச் சுற்றி வரும். மேலும் , மணிக்கு 27,300 கி.மீ., வேகத்தில் சீறிப்பாயும் இந்த விண்கலம், 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியை முழுவதுமாக சுற்றிவரும். அதன்பின் ,  'மூன்று நாட்கள் விண்வெளி பயணத்திற்குப் பிறகு , அட்லான்டிக் கடலில் பால்கன் ராக்கெட் வெற்றிகரமாகத் தரையிறங்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்வெளி சுற்றுலா பயணத்தை இது நாள் வரையில் அரசின் வாயிலாகப் பயிற்சி பெற்று, அதிகாரப்பூர்வ பயணத்தை மட்டுமே விண்வெளி வீரர்கள் மேற்கொண்டு வந்தனர்.ஆகவே , இந்த நான்கு பேரும் விண்வெளிக்கு முதல் முறையாகச் சுற்றுலா பயணம் மேற்கொண்ட பொதுமக்கள் என்ற சிறப்பை பெறுகின்றனர்.

இந்த விண்வெளி சுற்றுலாவில், கோடீஸ்வரர் ஜார்ட் ஐசக்மேன் உடன் ஹேலே ஆர்சனாக்ஸ்  என்ற பெண்ணும் பயணம் செய்தார்.எலும்பு புற்று நோயால் அவதிப்பட்டு வரும் இவருக்கு இடது செயற்கைக் கால் பொருத்தப்பட்டுள்ளது.மேலும், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் கிறிஸ் செம்ப்ரோஸ்கி  மற்றும் சியான் ப்ராக்டர் ஆகியோரும் சென்றுள்ளனர் .