world

img

கொலம்பியாவில் ராணுவ விமானம் விபத்து: 66 பேர் உயிரிழப்பு!

கொலம்பியா நாட்டில் 125 பேருடன் சென்ற ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 66 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள புட்டுமயோ மாகாணத்திலிருந்து, அந்நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான Lockheed C-130 Hercules ரக விமானம் 116 வீரர்கள் உட்பட 125 பேருடன் புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.
பெரு மற்றும் ஈக்வெடார் எல்லைப் பகுதியின் அருகே விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது. விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்புப் படையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர், 50-க்கும் மேற்பட்டோரை உயிருடன் மீட்டுள்ளனர். எனினும், 66 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
படுகாயமடைந்த பலர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், காட்டுப்பகுதியில் விழுந்த விமானம் தீப்பற்றியதால், பல அடிகள் உயரம் கரும்புகை எழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
விபத்திற்கான காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொலம்பியா விமானப்படையின் சமீபகால வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இந்த Lockheed C-130 Hercules விமான விபத்து கருதப்படுகிறது.