செவ்வாய் கிரகத்தின் பரப்பை காட்டும் வகையில் சீனாவின் ரோவர் ஜுராங் எடுத்த புதிய புகைப்படங்களை சீன தேசிய விண்வெளி அமைப்பு வெளியிட்டுளளது. செவ்வாய் கிரகத்தில் பயணித்து வரும் ரோவர் ஜுராங், செவ்வாயில் மண் பரப்புகள், பாறைகள் மற்றும் கற்களை படம்பிடித்து அனுப்பியுள்ளது.
கடந்தாண்டு ஜுலையில் தியான்வென் -1 என்ற விண்கலத்தை சீனா விண்ணில் செலுத்தியிருந்த நிலையில், கடந்த மே 15 ஆம் தேதி வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது அதனை தொடர்ந்த தியான்வென்னுடன் செலுத்தப்பட்ட ஜுராங் ரோவர், மே 22 ஆம் தேதி முதல் செவ்வாயில் பயணித்து ஆய்வு செய்து வருகிறது.