சீனாவின் கிங்காயில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் உள்ள டெலிங்கா நகரில் வெள்ளிக்கிழமை காலை ரிக்டர் அளவுகோலில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் சின்ஹுவாவின்படி, 38.52 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 97.33 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் சுமார் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கண்காணிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பாதிப்போ குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக புதன்கிழமை, சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யிபின் நகரின் ஜிங்வென் மாவட்டத்தில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.