முழு ஒத்துழைப்பு தந்தது சீனா
ஜெனீவா:
கொரோனா வைரஸ் தொற்று குறித்து ஆய்வு மேற்கொள்ள வூஹான் நகரத்திற்குச் சென்ற விஞ்ஞானிகள் குழுவுக்கு சீனா முழுஒத்துழைப்பு அளித்தது என்று உலக சுகாதாரஅமைப்பு தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து ஆராய உலக சுகாதார அமைப்பின் 10 பேர் அடங்கிய விஞ்ஞானிகள் குழு சீனாவுக்குச் சென்றது. கடந்த வாரம் வூஹான் சந்தையில்மருத்துவக் குழு ஆய்வு நடத்தியது.முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட மருத்துவமனைகளிலும் இக்குழு ஆய்வு செய்தது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு குழு கூறுகையில், வூஹானில் நாங்கள் எந்தவிததடையுமின்றி ஆய்வு செய்தோம். சீன அரசு எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்தது என்று தெரிவித்தது.ஆய்வுக்குப் பின்னர் உலக சுகாதார அமைப்பின் மருத்துவக் குழு அங்கிருந்த பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. வூஹானின் ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவவில்லை. உலகின் பலஇடங்களில் கொரோனா பரவல் நிகழ்ந்துள்ளது என்று ஏற்கெனவே சீனா விளக்கமளித்தது.
*****************
‘தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்திடுக!’
ஜெனீவா:
கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய் யும் உற்பத்தியாளர் கள், உற்பத்தியை பெருமளவு அதிகரிக்க வேண்டும் என் றும் உற்பத்தி செய்த தடுப்பூசிகளை மற்ற நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியாசிஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், உலகளவில் தற்போது தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் அளவு ஏற்கனவே தொற்று நோய்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கிறது, அப்படியிருந்தாலும் சுமார் 130 நாடுகளில் 2.5 பில்லியன் மக்கள் இன்னும் தடுப்பூசியை பெறவில்லை, ஆகவே அனைத்து கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்களும் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் உற்பத்தி செய்த தடுப்பூசியின் அளவை மற்றநாடுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், ஏனெனில் அனைத்து அரசாங்கங்களுக்கும் தங்கள்சொந்த மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
*****************
ஆப்கானிஸ்தானுக்கு கொரோனா தடுப்பூசி
புதுதில்லி:
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனாதடுப்பூசி ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.இந்தியாவின் சீரம் நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரித்து வருகிறது. இந்த மருந்துகள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இதில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் அண்டை நாடுகளுக்கும் பின்தங்கிய நிலையில் உள்ள நாடுகளுக்குக்கும் இந்திய அனுப்பி வருகிறது. பூடான், மாலத்தீவு நேபாளம், வங்காளதேசம், மியான்மர், மொரிசியஸ்,சீஷெல்ஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்குஇலவசமாக தடுப்பு மருந்தை அனுப்பி வைத்துள்ளது.இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டிற்குபிப்ரவரி 7 ஞாயிறன்று 5 லட்சம் டோஸ்கொரோனா தடுப்பூசி மருந்து அனுப்பி வைக்கப்பட்டது. மும்பையில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்ட மருந்துகாபூல் சென்றடைந்தது. இந்த தகவலை இந் திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். டிவிட்டரில், “எப்பொழுதும் நண்பர்களுடன் துணை நிற்போம்” என்று பதிவிட்டுள்ளார்.