india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

ஜூலை 29 சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் புலிமணற்சிற்பத்தை வடிவமைத்து ள்ளார். 

                          **********

சேலத்தில் அனுமதியில்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 1,500 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், கொரோனா பரவ காரணமாக இருத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

                          **********

சென்னையில் இருந்து வெளிநாடு செல்வதற்கான விமானக் கட்டணம் உயர்ந்துள்ளது. லண்டன், பாரீஸ், நியூயார்க் நகரங்களுக்கான பயணக் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

                          **********

சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பெகாசஸ் உளவு விவகாரத்தில் அந்த மென்பொருளை தயாரிக்கும் என்எஸ்ஓ நிறுவனத்தில் இஸ்ரேலிய புலனாய்வு அமைப்புகள் சோதனையிட்டுள்ளன.

                          **********

உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் தில்லி காவல் ஆணையராக ராகேஷ் அஸ்தானாவை ஒன்றிய பாஜக அரசு நியமித்துள்ளதாகக் கூறி, அவரது நியமனத்திற்கு எதிராக தில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

                          **********

தமிழகத்திலேயே விழுப்புரம் மாவட்டத்தில் தான் அதிகமான கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார். 

                          **********

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில அரசும், தேர்தல் ஆணையமும் தயார் நிலையில் இருப்பதாக  மாநில ஊரக வளர்ச்சி - உள்ளாட்சித் துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

                          **********

தில்லியில் உள்ள சுகாதார அமைச்சக அலுவலகத்தில் யோசனைகளை தெரிவிப்பதற்கான பெட்டி வைக்கப்பட்டுள்ளது. 

                          **********

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்கும் இந்திய ரயில்வே விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆதரவாக சிறப்பு ரொக்க விருதுகளை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

                          **********

சிறார் நீதி திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

                          **********

இந்தியாவின் கோவிட்-19 தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கும் என்று பிரதமர்  மோடியிடம் அமெரிக்காவின்  வெளியுறவுத்துறை அமைச்சர்  ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.

                          **********

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் உதவியுடன் கொரோனா  பரவலின் தன்மை குறித்து ஆய்வுநடத்துமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு  சுகாதாரத்துறைச் செயலர்ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

                          **********

மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கரூர் அரசு கலைக்கல்லூரியில் இலவச சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

                          **********

நவீன வளர்ச்சிக்கு ஏற்ப அறிவியலை கற்பிக்கும் மையமாக கோவையில் மாநகராட்சி சார்பில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் புதிய உயிரியல் பூங்காவை கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

                          **********

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு சலுகைகளை ரயில்வே அமைச்சகம் அறி வித்துள்ளது.

                          **********

மின்சார வாகனங்களை சாலையில் செல்லும் போதே சார்ஜ் செய்யும்  திட்டம் ஒன்றை இந்தியானா போக்குவரத்துக் கழகமும், அமெரிக்கஅரசும் இணைந்து செயல்படுத்த உள்ளது.  

                          **********

பிரான்சிடம் இருந்து இதுவரை 26 ரபேல் விமானங்கள் பெறப்பட்டுள்ளதாக மக்களவையில் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தகவல் தெரிவித்துள்ளார்.