world

புதிதாக வருபவர்களுக்கு வேலைகள் இல்லை! கடும் நெருக்கடியில் சிக்குகிறது கனடா!

டொராண்டோ, செப்.9- கனடாவின் வேலை சந்தையில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதிதாக வந்தவர்க ளால் வேலையை கண்டுபிடிக்க முடிய வில்லை. தொழில் நிறுவனங்கள், ஊழி யர்களை மெதுவான வேகத்தில் பணியமர்த்து கின்றன என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் வேலை செய்யும் வயதுடைய மக்கள்தொகை 96,400  அதிகரித்தது என்று ‘ஸ்டாடிஸ்டிக்ஸ் கனடா’ ஓர் அறிக்கையில் தெரிவித்தது. இது உலகி லேயே வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான கனடாவின் வேகமான மக்கள் தொகை வளர்ச்சியின் விளைவாகும். கடந்த  மாதம் 82,000க்கும் மேற்பட்ட மக்கள் நாட்டின் தொழிலாளர் சக்தியில் இணைந்தனர், ஆனால் நிகர வேலைவாய்ப்பு 22,100 மட்டுமே அதிகரித்தது.

கடந்த மூன்று மாதங்களில், கனடாவின் பொருளாதாரம் தொழிலாளர் சக்தியில் இணைந்த ஒவ்வொரு ஆறு தொழிலாளர்க ளுக்கும் ஒரு புதிய வேலையை மட்டுமே உரு வாக்கியுள்ளது; இது ஒரு வருடத்திற்கும் மேலான காலத்தில் மிகக் குறைந்த விகிதமா கும். இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஒரு குறிப்பிடத்தக்க மந்தநிலையாகும். 

கோவிட் தொற்றுநோய்க்கு முந்தைய 20 ஆண்டுகளில், கனடா ஒவ்வொரு ஆண்டும் தனது வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகையில் 2,00,000 முதல் 5,00,000 பேரை சேர்த்தது. சராசரியாக, மூன்றில் இரண்டு பங்கு பேர் வேலை தேடுவார்கள், மேலும் கிட்டத்தட்ட அனைவரும் வேலை கிடைக்கப் பெறுவார்கள்.

கனடாவின் மக்கள்தொகை கடந்த ஆண்டில் 3.2% அதிகரித்துள்ளது. இது வெளி நாட்டு மாணவர்கள் மற்றும் தற்காலிக தொழி லாளர்களின் அதிக குடியேற்றத்தால் உந்தப் பட்டது. இது, வேலை வாய்ப்புச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கருதி,  ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்தை புதிதாக குடியேறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்க தூண்டியுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில், கடந்த ஐந்து ஆண்டு களில் வந்த குடியேறிகளுக்கான வேலை யின்மை விகிதம் 12.3% ஆக இருந்தது. இது கனடாவில் பிறந்தவர்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு முன்பு வந்த குடியேறிகளின் விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

கனடாவில் ஏராளமான தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பணிபுரிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.