வங்க தேசம் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்தர மோடியின் வருகையை கண்டித்து டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கதேசத்தின் 50-வது சுதந்திர தினம் மற்றும் தேசத் தந்தை ஷேக் முஜிபூர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் பயணமாக இந்திய பிரதமர் மோடி இன்று வங்கதேசம் சென்றார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகையை கண்டித்து டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்படனர். இந்த போராட்டத்தில் சுமார் 2000 மாணவர்கள் கலந்து கொண்டு அணிவகுப்பு நடத்தினர். இதனால் காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.
இதில் 40 மாணவர்கள் படுகாயம் அடைந்து, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 30 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.