world

img

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் வங்கதேசம்

டாக்கா,டிச.24- வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வை நாடு கடத்த வேண்டும் என  வங்கதேச இடைக்கால அரசு, இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.  

நவதாராளமய பொருளாதார கொள்கை யால் வங்கதேசத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, இட ஒதுக்கீட் டில் ஏற்பட்ட பிரச்சனைகள் மாணவர்களின் கோபத்தை தூண்டி நாடு தழுவிய போராட் டத்தை உருவாக்கியது. மாணவர்களின்  போராட் டத்தை தொடர்ந்து ஷேக் ஹசீனாவின் அரசு மாணவர் அமைப்பு தலைவர்களுடன் முறை யாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோ ரிக்கையை நிறைவேற்ற எந்த நடவடிக்கையை யும் எடுக்கவில்லை.

இது மாணவர்களின் கோபத்தை மேலும் தூண்டியது.  போராட்டம் மிக உச்சத்தை தொட்ட வுடன் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜி னாமா செய்து விட்டு ஆகஸ்ட் 5 அன்று இந்தியா வில் தஞ்சம் புகுந்தார். அதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. அதன் பிறகு ஷேக் ஹசீ னாவின் அவாமி லீக் கட்சி தலைவர்கள் மீது  வழக்கு பதிவது, சிறையில் அடைப்பது, இந்தியா வில் தஞ்சம் புகுந்துள்ள ஷேக் ஹசீனா மீது வழக்குப் பதிவது என்பதில் மட்டுமே இடைக் கால அரசு கவனம் செலுத்தி வருகிறது.

வங்கதேச சிறுபான்மை மக்கள் மீது தொ டர்ந்து அதிகரித்து வருகிற தாக்குதலை கட்டுப் படுத்த இடைக்கால அரசு முறையான நடவ டிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. இந்தச்  சூழ்நிலையில், வங்கதேச தலைநகர் டாக்காவை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச குற்ற தீர்ப்பாயம் (ஐசிடி) ஷேக் ஹசீனா, முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிராக கைது உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் ஷேக் ஹசீனாவை இந்தியா வில் இருந்து நாடு கடத்த வங்கதேசம் அதிகா ரப்பூர்வமாக கடிதம் எழுதியுள்ளது. இடைக்கால அரசின் வெளியுறவுத் துறை ஆலோசகர் டோஹி ஹுசைன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். வங்கதேச உள் துறை ஆலோசகர் ஜஹாங்கிர் ஆலமும் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே குற்றவாளிகளை பரஸ்பரமாக நாடு கடத்திக்கொள்வது தொடர்பான ஒப்பந்தம் நடை முறையில் உள்ளது. இதன் அடிப்படையில்  ஹசீ னாவை அழைத்து வந்து கைது செய்ய வங்க தேச இடைக்கால அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு இந்திய அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.