world

img

வெனிசுலா: ரகசியப் படுகொலைத் திட்டத்திற்கு டிரம்ப் ஒப்புதல்

வெனிசுலா: ரகசியப் படுகொலைத் திட்டத்திற்கு டிரம்ப் ஒப்புதல்

வெனிசுலாவின் மதுரோ அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி யில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, தற் போது அங்கு ரகசியப் படுகொலை களை நடத்தவும், ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றவும் தனது உளவுத் துறையான சிஐஏ முன் வைத்த திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தகவலை நியூயார்க் டைம்ஸ் இதழ் உறுதிப் படுத்தியுள்ளது. சிஐஏ இயக்குநர் ஜான் ராட்கிளிஃப், வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோர் தலைமையில் புதிய ஆட்சிக்கவிழ்ப்புத் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் போர் அத்துமீறல்கள் அமெரிக்காவின் இந்தத் திட்டத் திற்கு, வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரும் அமைதிக்கான ‘நோபல் பரிசு’ பெற்ற தீவிர  வலதுசாரியான மரியா கொரினா மச்சாடோ பயன்படுத்தப்படுகிறார். இவரை ஆட்சியில் அமர்த்தி, அந்நாட்டின் இயற்கை வளங்களை  கொள்ளையடிக்கவே டிரம்ப் வெனி சுலாவில் திட்டமிட்ட தாக்குதல் களை நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், அமெரிக்கா எட்டு போர்க்கப்பல் கள், விமானங்கள் மற்றும் சுமார் 10,000 ராணுவ வீரர்களைக் கரீபி யன் கடலில் (வெனிசுலா எல்லை யில்) நிலைநிறுத்தியுள்ளது. இவை மீனவர்களின் படகுகள் உட்பட பல படகுகள் மீது தாக்குதல் நடத்தி 27 நபர்களைப் படுகொலை செய்துள் ளன. இதை சட்டவிரோதப் படு கொலைகள் என்று சட்ட மற்றும் மனித உரிமைகள் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். போர்க்கப்பல்களை நிலை நிறுத்துவதற்கு முன், மதுரோ போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பில் இருப்ப தாகவும், அவர் சர்வாதிகாரி என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. இந்த ஆதாரமற்ற பொய்க் குற்றச் சாட்டுகளைக் கட்டவிழ்த்துவிட்டு டிரம்ப் பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும், மதுரோவின் தலைக்கு ₹439 கோடி விலை வைத்துள்ளார். சிஐஏவின் படுகொலைத் திட்டத் திற்கு ஒப்புதல் கொடுப்பதற்கு முன் பாகவே ஒரு படகு மீது குண்டு வீசி அப்பாவிப் பொதுமக்களை அமெ ரிக்கா படுகொலை செய்துள்ளது. ஐ.நா.வில் வெனிசுலா கண்டனம் டிரம்ப் வழக்கம் போல, மதுரோ அரசாங்கம் போதைப்பொருட் களைக் கடத்தியதாகவும், குற்ற வாளிகளையும், புலம்பெயர்ந்து செல்லும் மக்களையும் அமெரிக்கா விற்குத் திட்டமிட்டு அனுப்புவதாக வும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு களைச் சொல்லி தனது அத்து மீறலை நியாயப்படுத்தினார். அந்நாட்டின் மீது தரை வழியாகவும்  தாக்குதல் தொடரும் என்றும் கூறி யுள்ளார். இதற்குப் பதிலடியாக, வெனிசுலா ராணுவம் தற்காப்பு நட வடிக்கையாக ஒத்திகைகளைத் துவங்கியுள்ளது. அமெரிக்காவின் குற்றச்சாட்டு களுக்கு நீதிமன்றத்தில் நிரூபிக்கப் பட்ட எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவல கம் (UNODC), வெனிசுலாவில் பெரிய போதைப்பொருள் தயாரிப்போ, கப்பல் ஏற்றி வெளிநாடுகளுக்குக் கடத்துவதோ இல்லை என அறி வித்துள்ளது. அக்டோபர் 2 அன்று வெனிசுலா வுடனான அனைத்து ராஜீய உறவு களையும் துண்டித்த பிறகு அமெரிக்கா தாக்குதல்களைத் தீவி ரப்படுத்தியுள்ளது. வெனிசுலாவின் மீது நேரடிப் போர் தொடுக்க ஒரு காரணத்தை உருவாக்குவதற்காக, அங்குள்ள அமெரிக்க ஆதரவு வலதுசாரிக்குழுக்கள் கைவிடப் பட்ட அமெரிக்கத் தூதரகத்தில் வெடிகுண்டுகளை வைத்து தகர்க்கத் திட்டமிட்டதை மதுரோ அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. சிஐஏவின் வரலாறு தென் அமெரிக்காவில் இடது சாரிகள் மற்றும் சோசலிஸ்டுகள் தலைமையிலான அரசாங்கங் களை அமெரிக்கா தொடர்ந்து கவிழ்த்துள்ளது என்பதை சிஐஏ வின் ஆவணங்களே உறுதிப்படுத்தி யுள்ளன. 1954 இல் குவாதமாலா, 1973 இல் சிலி, வெனிசுலாவில் சாவேஸ் தலைமையிலான அரசு களை சிஐஏ கவிழ்த்து உள்ளது. வெனிசுலாவில் சாவேஸைக் கவிழ்க்க/படுகொலை செய்ய நடந்த பல சதித் திட்டங்களின் பின்ன ணியில் சிஐஏ உள்ளது என வெனி சுலா ஏற்கெனவே குற்றம்சாட்டியுள் ளது. 2024 ஆம் ஆண்டு துவக்கத்தி லும் மதுரோவைக் கொலை செய்ய திட்டமிட்ட தீவிர வலதுசாரிக் குழுக் களுக்குப் பின்னால் சிஐஏ மற்றும் போதைப்பொருள் அமலாக்க நிர்வாகத்தின் (DEA) உதவி இருந்ததாக வெனிசுலா குற்றம் சாட்டியது. வெனிசுலாவில் கச்சா எண் ணெய், இயற்கை எரிவாயு, இரும்பு, தங்கம் போன்ற மிகப்பெரிய இயற்கை வளங்கள் உள்ளன. இவ்வளங்களை அபகரிக்கவே பல ஆண்டுகளாக அமெரிக்கா திட்ட மிட்டு வருகிறது. ஜனாதிபதி மதுரோ  விடுத்த பேச்சுவார்த்தை அழைப்பு களை அமெரிக்கா ஏற்க மறுப்பது, அதன் ஆக்கிரமிப்புத் திட்டத்தில் உறுதியாக இருப்பதையே காட்டு கிறது. - சேது சிவன்