world

img

வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கு 100% வரி: டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100% வரி விதிக்கும் நடைமுறையை தொடங்க அந்நாட்டு வணிகத் துறைக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து டிரம்ப் தனது Truth Social தளத்தில் கூறியதாவது:
"அமெரிக்க திரைப்படத் துறை மிக வேகமாக அழிந்து வருகிறது; மற்ற நாடுகள், அவர்கள் திரைப்பட ஸ்டூடியோக்களை பயன்படுத்திக் கொள்ள தயாரிப்பாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது; இது ஹாலிவுட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பின் இந்த உத்தரவால், டிஸ்னி, பாரமவுண்ட் மற்றும் வார்னர் பிரதர்ஸ் போன்ற முக்கிய ஸ்டூடியோக்கள் பாதிக்கப்படும் என அமெரிக்க நாட்டின் முன்னணி ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.