world

img

தீக்கதிர் உலக செய்திகள்

அமெரிக்காவின் நிதி வெட்டு  குழந்தைகள் பாதிப்பு

அமெரிக்காவின் நிதி வெட்டுக்களால் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 1.4 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்படுவதாக ஐ.நா., குழந்தைகள் நிதியத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் ஊட்டச்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள  அத்தியாவசியத் தேவைகளை பெற வேண்டிய குழந்தைகளுக்கு போதிய உதவி செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் 20 ஆண்டுகளாக குழந்தைகளிடையேயான வறுமையை ஒழிப்பதில் ஏற்பட்ட முன்னேற்றம் தடைபடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சூடான் தலைநகரை   மீட்டது ராணுவம் 

சூடான் தலைநகர் கார்டூமை மீட்டு விட்டதாக அந்நாட்டின் ராணுவத் தளபதி ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் அறிவித்துள்ளார். உள்நாட்டுப் போரில் கடந்த சில வாரங்களாக ராணுவம் முன்னேறி வருகின்றது. சில நாட்களுக்கு முன் அந்நாட்டின் ஜனாதிபதி மாளிகையையும் விமான நிலையத்தையும் துணை ராணுவப்படையிடம் இருந்து மீட்ட நிலையில் தற்போது தலைநகரை மீட்டுள்ளது. இந்த மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு தலைநகர் கார்டூம் விடுதலையாகி விட்டதாக அந்நாட்டின் தளபதி அறிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் உறவு முறிந்தது:   கனடா பிரதமர் அறிவிப்பு

அமெரிக்காவுடனான பழைய உறவுகள் முடிவுக்கு வந்து விட்டதாக கனடா பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார். பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்புகளின்  அடிப்படையில் அமெரிக்காவுடனான நமது பழைய ஆழமான உறவு முடிவுக்கு வந்து விட்டது. நமது பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுக்கான பரந்த அளவிலான ஒத்துழைப்புக்கான நேரம் விரைவில் வரும் என அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சிரியா - லெபனான்  எல்லை ஒப்பந்தம்

சிரியா - லெபனானுக்கு இடையே எல்லை வரையறை ஒப்பந்தம் கையெழுத்தாகி யுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையே எல்லையில் தொடர் சண்டைகள் நடைபெற்று வரும்  நிலையில் சவூதி அரேபியாவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. வரும்  நாட்களில் இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை பதற்றங்கள் தணிந்து அமைதியை நோக்கிச் செல்லும் என கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைச் சண்டையில் 10 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

ஆப்கன். அகதிகளை  நாடு கடத்துவதில் தீவிரம்

பாகிஸ்தான் அரசு  213 ஆப்கன் அகதிகளை நாடு கடத்தியுள்ளது. ஆப்கன் அகதிகள் தாமாக பாகிஸ்தானை விட்டு வெளியேற மார்ச் 31 இறுதி நாளாகும். இந்நிலையில் போதிய ஆவணங்கள் இல்லாமல் பாகிஸ்தானில் தங்கியுள்ள ஆப்கன் அகதிகளை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை பாக் அரசு தீவிரப்படுத்தி வருகின்றது.  இந்நிலையில் ஆவணங்கள் இல்லாத பலரையும் தடுப்பு முகாமில் அடைத்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

உக்ரைனுடனான கனிம ஒப்பந்தத்தை மாற்றும் அமெரிக்கா

உக்ரைனுடன் அமெரிக்கா ஏற்படுத்தி இருந்த கனிம ஒப்பந்தத்தை மாற்றி புதிய நிபந்தனைகளை இணைத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த் தைகளின் ஒரு பகுதியாக உக்ரைனின் கனிம வளங்களில் சுமார் 50 சதவீதத்தை அமெரிக்காவுக்கு கொடுக்க வேண்டும் என அமெரிக்கா நிர்பந்தித்து அந்த ஒப்பந்தத்தை உக்ரைனை ஏற்கவும் வைத்தது.

 இந்நிலையில் அந்த கனிம ஒப்பந்தத்தை திருத்தி புதிய நிபந்தனைகளை விதித்து  விரி வான முறையில் உக்ரைனுடன் மீண்டும் ஒப்பந்தத்தை ஏற்படுத்தப் போவதாக சில முக்கியமான அமெரிக்க அதிகாரிகள் தெரி வித்துள்ளனர் என செய்திகள் வெளியாகி யுள்ளன. தங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என உக்ரைன் கேட்டிருந்த நிலையில்  புதிய ஒப்பந்தத்தில் உக்ரைனுக்கு எந்தவொரு எதிர்கால பாதுகாப்பு உத்தரவாதத்தையும் அமெரிக்கா வழங்கவில்லை என கூறப்படுகின்றது.

அதேபோல உக்ரைனின் கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்கு ஒரு  கூட்டு முதலீடு மூலமாக உக்ரைன் பங்கு வகிக்க வேண்டும் என அமெரிக்கா ஒப்பந்தத் தில் நிர்பந்திப்பதாகக் கூறப்படுகின்றது.

\இந்த விதிமுறைகள் கடந்த மாதம் அமெரிக்காவில் டிரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி க்கு இடையே நடந்த சந்திப்புக்கு முன் விவாதிக்கப்பட்ட ஒப்பந்தத்தை விட மிகவும் முக்கியமானதாக இருப்பதாகக் கூறப்படுகின்றது. அமெரிக்காவின் சார்பாக இந்த பேச்சு வார்த்தையை அந்நாட்டின் கருவூலத்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் இந்த பேச்சு வார்த்தை குழுவுக்கு தலைமை வகிப்ப தாகக் கூறப்பட்டது. இந்த புதிய ஒப்பந்தங் கள் குறித்து  அவரிடம் கேள்வி எழுப்பிய போது, அவர்  உடனடியாக எந்த பதிலும் சொல்ல வில்லை.