world

தீக்கதிர் உலக செய்திகள்

போர் நிறுத்தம் ஏற்படும் வரை  பொருளாதாரத் தடை நீடிக்கும்

உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் நீடிக்கும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். மேலும் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு ஐரோப்பிய நாடுகள் உட்பட தன்னுடைய கூட்டணி நாடுகளும் ரஷ்யா மீதான தடையை நீக்க முன்வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாத இறுதியில் டிரம்ப் மற்றும் புடின் சந்திப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

கியூபா உள்ளிட்ட நாடுகளின்  மருத்துவர்களை வரவேற்கும் மெக்சிகோ 

மெக்சிகோ சுகாதாரத் துறையில் கியூபா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களை பணியில் சேர்க்கும் அனு மதியை  இடதுசாரி ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் வழங்கியுள்ளார். நமது நாட்டிற்கு அதிகமான மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் தேவைப்படும் சூழலில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் அவசரத் தேவை. வெளிநாட்டு மருத்துவர்கள் நமது நாட்டில் பணியாற்றுவதன் மூலம் நமது மருத்துவர்களின் திறனையும் உயர்த்த முடியும் என்றார். 

போப் உடல்நிலையில்  பின்னடைவு  ஏற்பட்டுள்ளது

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள் ளது. கடந்த வாரம் உடல்நிலை குறைபாட்டின் காரண மாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டிருந்தார். பிறகு அவருக்கு சிறிதளவு உடல்நிலை சீராக இருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது போப் பிரான்சிஸ் உடல்நிலை மோசமடைந்து விட்டது எனவும் அவரது  நுரையீரலின் 2 பகுதிகளிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளது எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் பிரதமர் மீது  குண்டு வீசியவருக்கு சிறை 

2023 இல் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மீது  குண்டு வீசிய  ரியூஜி கிமுராவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  முன்னாள் பிரதமர் கிஷிடா பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது  வீட்டில் தயாரிக்கப்பட்ட பைப் வெடிகுண்டை அவர் மீது  ரியூஜி வீசினார்.  இந்த சம்பவத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

6 இஸ்ரேலியர்களை அனுப்புவதாக   ஹமாஸ் அறிவிப்பு 

பிப்.22 சனிக்கிழமை 6 இஸ்ரேலியர்கள் மற்றும் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 4 நபர்களின் உடல்களை இஸ்ரேலிடம் கொடுப்பதாக ஹமாஸ் தெரி வித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பாலஸ்தீன மக்களுக்கு கொடுக்க வேண்டிய சிறிய வீடுகளை இஸ்ரேல் தடுத்து நிறுத்தி வைத்திருந்தது.பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் அவ்வீடுகளை அனு மதித்துள்ளது. இந்நிலையில் தான் ஹமாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.