அமெரிக்காவின் கடுமையான நாடுகடத்தல் நடவடிக்கைகள்
“நீங்கள் எல்லை தாண்டினால், அப்புறப்படுத்தப் படுவீர்கள்” என அமெரிக்காவில் தகுதியான ஆவணங்கள் இல்லாமல் வாழும், நுழையும் நபர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தும் நடவடிக்கையை டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் வாரத்திலேயே மேற்கொண்டிருக்கிறார். கைவிலங்கிட்டு நாடு கடத்தும் அடிமை, காலனிய காலத்து நடைமுறைகளையும் ஈவு இரக்கமின்றி செய்திருக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். முதலாளித்துவ ஜனநாயகம் யாருக்கானது? என மாமேதை லெனின் கேட்டது போல் மூன்றாம் உலக நாடுகள் இன்று ஏகாதிபத்திய முகாமை நோக்கி கேள்விக் கணைகளை எழுப்பியிருக்கின்றன.
மனிதாபிமானமற்ற விவாதங்கள்
சட்டவிரோத குடியேறிகளை பிசினஸ் கிளாஸ் விமா னத்திலேயே அழைத்து வரமுடியுமென்ற மனிதத் தன்மையற்ற விவாதங்களையும் சில அற்ப மனிதர்கள் வாதிடுகிறார்கள். அமெரிக்காவின் இந்நடவடிக்கை எதிர் கால வாழ்க்கையை தேடி புலம்பெயர்பவர்களுக்கு சொல்லும் செய்தி ஒன்றுதான். உங்களின் இருப்பு நாட்டுக்கு தேவையில்லை என்பது மட்டுமல்ல; நீங்கள் எதிரியும் கூட.
புலம்பெயர்வதற்கான காரணங்கள்
உலகம் முழுவதும் பலரும் சிறந்த எதிர்காலத்தி ற்கான இடப்பெயர்வாக வளரும், ஏழை நாடுகளில் இருந்து முன்னேறிய அமெரிக்கா, ஐரோப்பிய, வளைகுடா நாடுகளுக்கு புலம்பெயர்ந்த வண்ணம் இருக்கின்றார்கள். அதற்கு வறுமை, உள்நாட்டுப் போர் மற்றும் சொந்த நாட்டில் கண்ணியமற்ற வாழ்க்கை என்பனவையே காரணங்களாக உள்ளது.
இந்தியாவிலிருந்து புலம்பெயர்வோர்
அமெரிக்க விசா கிடைக்காதவர்கள் பனாமா, மெக்சிகோ எல்லைகள் என லத்தீன் அமெரிக்க நாடுகளின் வழியாக தினசரி நூற்றுக்கணக்கில் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். அதில் இந்தியா வைச் சேர்ந்தவர்களும் அடக்கம். அதிலும் குஜராத், பஞ்சாப், ஹரியானா போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகமென ஒரு புள்ளிவிவரம் கூறுகின்றது.
புலம்பெயர் மக்கள் மீதான அமெரிக்காவின் கொடுமைகள் சுரண்டல் மற்றும் சட்டரீதியான புறக்கணிப்பு
ரீகன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு என்ற முறையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கைது நடவடிக்கை, 9/11 பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் பாதுகாப்பு பிரச்சனை என்ற பெயரில் தீவிரமானது. டிரம்ப்பின் முதல் ஆட்சிக்காலத்தில் மெக்சிகோ–அமெரிக்கா இடையில் எழுப்பப்பட்ட மதில் சுவர் பல்வேறு சர்ச்சைகளையும், பிரச்சனைகளையும் சர்வதேச அளவில் உருவாக்கியிருந்தது.
ஏஜெண்டுகளின் சுரண்டல்
முன்னேறிய நாடான அமெரிக்காவில் வேலை, வாழ்க்கை என்ற ஆசையில் விசா கிடைக்காத நிலை யில் அந்நாட்டிற்குள் நுழைய வேறுவகையான வழி களை தேடுகிறார்கள். அதில் ஒன்றுதான் அண்டை நாட்டு எல்லைகள் வழியாக ஏஜெண்டுகள் உதவி யோடு நுழையும் சோதனை முயற்சி. இதில் அமெரிக்கா வில் நுழைந்தவர்களின் எண்ணிக்கையைவிட ஏஜெண்டுகளிடம் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்களும், அந்த ஆபத்தான கழுதை பாதை பயணங்களில் நுழைய முயன்று செத்து மடிந்தவர்களும், பாதுகாப்பு போலீசாரிடம் பிடிப்பட்ட வர்களுமே அதிகம்.
தனியார் சிறைச்சாலைகளின் வணிகமயமாக்கல் புலம்பெயர் மக்களை சுரண்டும் தனியார் சிறைச்சாலைகள்
முறையான ஆவணங்கள் இல்லாமல் கைது செய்யப்படும் புலம்பெயர் மக்கள் பெரும்பாலும் அமெ ரிக்காவில் உள்ள தனியார் சிறைச்சாலைகளிலேயே அடைக்கப்படுகிறார்கள். இந்த சிறைச்சாலைகள் நாடு முழுவதும் கரையான் புற்றீசல்கள் போல வளர்ந்தது என்பது புலம்பெயர் மக்கள் கொத்துக் கொத்தாக சிறை பிடிக்கப்பட்ட அதே காலத்தில்தான். அமெரிக்க அரசு புலம்பெயர் சிறை கைதிகளுக்கு சராசரியாக 126 டாலர் அளவில் செலவு செய்து வருகிறது. இதனை வாய்ப் பாக பயன்படுத்தி தனியார் சிறைச்சாலைகளை நிர் வகிக்கும் இரண்டு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் (CoreCivic மற்றும் GEO Group) பல மில்லியன் டாலர் வருவாயினை ஈட்டியிருக்கின்றன.
புலம்பெயர் மக்களின் வாழ்க்கை நிலை சுரண்டல் மற்றும் சட்டரீதியான புறக்கணிப்பு
இத்தனை இன்னல்களை சந்தித்து எல்லையை தாண்டுபவர்கள் அமெரிக்காவிலும் சுதந்திரமான, கண்ணியமான வாழ்க்கையையோ வாழவில்லை. குறைந்த சம்பளத்தில் கட்டிட, விவசாய மற்றும் வீட்டு வேலைகளில் அமர்த்தப்படுகிறார்கள். அமெரிக்க பிரஜைகளுக்கோ, புலம்பெயர் தொழிலாளர்க ளுக்கோ வழங்கப்படும் எவ்வித நல உரிமைகளும் இவர்களுக்கு கிடையாது. ஒரு நீதிமன்ற வழக்கில் கூட முறையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்கா வில் பணிபுரிபவர்கள் சட்டத்திற்கு புறம்பாக வேலை யிலிருந்து நீக்கப்பட்டாலோ? சங்கம் சார்ந்த நடவ டிக்கைகளில் ஈடுபட்டாலோ எவ்வித சட்டரீதியான உரிமைகளையும் கோர முடியாது என தீர்ப்ப ளிக்கப்பட்டிருந்தது.
தனியார் சிறைச்சாலைகளின் மோசமான நிலை
புலம்பெயர் மக்களை சிறைப்படுத்துவதன் மூலம் இவ்வளவு லாபம் கொழிக்கும் இந்த தனியார் சிறைச்சாலைகளில் எந்தவித அடிப்படையான வசதி களையும் சிறைச்சாலைக்குள் செய்து கொடுப்ப தில்லை. குடிநீர், கழிப்பறை பற்றாக்குறை, இட நெருக் கடி, சுகாதாரமற்ற தன்மை என பல்வேறு பிரச்சனை கள் தனியார் சிறைச்சாலைகள் சம்பந்தமாக அமெ ரிக்காவில் பலகாலமாக பேசப்பட்டு வருகின்றன.
புலம்பெயர் மக்களுக்கான நீதிக்கான போராட்டம்
நவீன தாராளமய கொள்கைகளின் பாதிப்பினா லேயே மக்கள் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து வருகிறார்கள். அவை அமெரிக்காவின் பிரச்சனை மட்டுமல்ல. உலகளவில் இருக்கின்ற வர்க்க ஏற்றத்தாழ்வு பிரச்சனை. எதிர்கால வாழ்க்கைக்காக இடம்பெயர்ந்து வேலை தேடுவது என்பது அமெரிக்காவின் இந்த நடவடிக்கை யினால் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் மக்கள் மீதான இத்தகைய இராணுவ நடவடிக்கை யை தடுத்து நிறுத்தாவிடில், பிற நாடுகளில் உள்ள வலதுசாரி ஆட்சியாளர்களும் தேசியவாதம் என்ற பெயரில் இதுபோன்ற மனிதாபிமானமற்ற நடவ டிக்கைகளில் ஈடுபட முன்னுதாரணமாக அமைந்து விடும்.
டிரம்பின் வெறுப்பு தேசியவாதம்
2016 ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் நான் வெற்றி பெற்றால் தனியார் சிறைச்சாலை களுக்கான ஒப்பந்தத்தினை ரத்து செய்வேன் என வாக்குறுதி அளித்திருந்தார். அதற்கு எதிர்வினை யாக மற்றொரு வேட்பாளரான டிரம்ப் தனியார் சிறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டினை நான் இரட்டிப் பாக்குவேன் என அத்துறையின் பெருமுதலாளிகளு க்கு சாதகமாக நடந்து கொண்டார். அதன் விளை வாக அந்த தேர்தலில் டிரம்பிற்கு அதிகமாக செலவு செய்த நிறுவனங்கள் பட்டியலில் கோர் சிவிக் (Corecivic), சிஇஓ குரூப் (GEO Group) இடம்பெற்றி ருந்தன. டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு இந்நிறுவ னங்களின் பங்குச் சந்தை மதிப்பும் பலமடங்கு உயர்ந்தது.
புலம்பெயர்வதற்கான உலகளாவிய காரணங்கள்
முதலாளித்துவத்தின் சுதந்திரச் சந்தை கொள்கை க்கு மாற்றாக உள்நாட்டு வணிகத்தை மேம்படுத்த ஏனைய நாடுகளின் பொருட்கள் மீது அதிக இறக்கு மதி வரி என்பன போன்ற நடவடிக்கைகளை மேற் கொள்வதெல்லாம் அமெரிக்காவை நெருக்கடியில் இருந்து ஒருபோதும் மீளச் செய்யாது. மெக்சிகோ ஜனாதிபதி சொன்னதுபோல உலகம் என்பது அமெரிக்கா மட்டுமல்ல. அது 700 கோடி மக்களை கொண்ட பன்முகத்தன்மையுடையது, விசாலமானது.
இந்திய அரசின் புறக்கணிப்பு
அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இந்தியா தன் சொந்த நாட்டு மக்கள் மீதான மனித உரிமை அத்துமீறல் நடவடிக்கையினை மெளனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. உலகளவில் புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களை தேர்தல் காலங்களில் புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி, தற்போது அவர்களின் எதிர்கால வாழ்க்கை அபாயத்தில் இருக் கும்போது பேசாதிருக்கிறார்.