ஜெலன்ஸ்கியை அடுத்த வாரம் டிரம்ப் சந்திக்க உள்ளார்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அடுத்த வாரம் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியைச் சந்திப்பார் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் போர் நிறுத்தம் பற்றி பேசப்படும் என்றும் பேச்சுவார்த்தை அமெரிக்கா நினைத்தபடி நடக்கவில்லை என்றால் மீண்டும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா நகரை முழுமையாக ஆக்கிரமிக்க இஸ்ரேல் தீவிரம்
காசா நகரத்தை முழுமையாக ஆக்கிர மிப்பதற்காக இஸ்ரேல் ராணுவம் பயங்கர குண்டு வீச்சுக்களுடன் தரைவழித் தாக்குதலை துவங்கி உள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செப்.15 வரை காசா நகரில் இருந்து 1,90,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களையும் செப் 16,17 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 48,000 பாலஸ்தீனர்க ளையும் இஸ்ரேல் ராணுவம் கட்டாயமாக வெளியேற்றியுள்ளது என ஐ.நா மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவ லகம் உறுதிசெய்துள்ளது.
பிரேசில் முன்னாள் ஜனாதிபதி மன்னிப்புக் கேட்க உத்தரவு
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சானரோ பதவியில் இருந்தபோது இனவெறி கருத்துகளை தூண்டியதற்காக சுமார் 1,88,000 டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும், பொது மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஃபெடரல் பிராந்திய நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. 2022 இல் ஆட்சி கவிழ்ப்பு நடத்த முயற்சி செய்ததற்காக அவருக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்ப்பும் வெளியாகியுள்ளது.
சரக்கு விண்கலன் என்ஜினில் கோளாறு
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 5,000 கிலோ பொருட்களுடன் சென்ற சிக்னஸ் எக்ஸ்எல் என்ற சரக்கு விண்கலனின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த சரக்கு விண்கலன் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சிக்கிக் கொண்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சிப்பணியில் உள்ள விண்வெளி வீரர்களுக்குத் தேவையான தொ ழில்நுட்பக் கருவிகள், உணவுப் பொருட்கள் இதில் அனுப்பப்பட்டுள்ளன என்பது குறிப் பிடத்தக்கது.
ரஷ்யாவில் முதலீடு செய்ய பைடன் விதித்த தடைகளை கட்டாயம் நீக்க வேண்டும்: அமெரிக்க முதலாளிகள் விருப்பம்
நியூயார்க்,செப்.17- ஜோபைடன் ஜனாதிபதியாக இருந்த போது ரஷ்யாவில் முதலீடு செய்யக் கூடாது என விதித்த தடைகளை டிரம்ப் நீக்க வேண்டும் என அமெரிக்க பெருமுதலாளிகளில் ஒரு பிரிவி னர் வெளிப்படையாகவே விருப்பம் தெரி வித்துள்ளனர். ரஷ்யாவில் உள்ள அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் தலைவரான ராபர்ட் ஏஜி தனது பேட்டியில் கூறியதாவது: ரஷ்யாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்க ளுக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் விதித்த முதலீட்டுத் தடைதான். இது மீண்டும் ரஷ்யாவில் முதலீடு செய்ய விரும்பும் அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமன்றி, ரஷ்யாவிலேயே இயங்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கும் பெரும் தடையாக உள்ளது. அமெரிக்க நிறு வனங்கள் மீண்டும் ரஷ்யாவில் முதலீடு செய்யவும், தொழில் நடத்தவும் இந்தத் தடையை கட்டாயம் நீக்க வேண்டும் என்பதே முக்கிய நிபந்தனை என்று அவர் தெரிவித்தார். மேலும் அமெரிக்க நிறுவனங்கள் இன்னும் ரஷ்யாவை ஒரு நம்பிக்கைக்குரிய சந்தையாகவே பார்க்கின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார். 2022 இல் உக்ரைன்-ரஷ்யா போர் வெடித்த பிறகு பைடன் நிர்வாகத்தால் பிறப்பிக்கப்பட்ட ஒரு நிர்வாக உத்தரவின்படி அமெரிக்கர்கள் ரஷ்யா வில் முதலீடு செய்ய தடை விதிக்கப்பட்டது. இத னால் அமெரிக்காவில் உள்ள முதலாளிகளில் ஒரு பிரிவினர் அதிருப்தி அடைந்தனர். டிரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தை யின் ஒரு பகுதியாக ரஷ்யாவுடன் வணிக மற்றும் முதலீட்டு உறவுகளை மீண்டும் துவங்கும் முயற்சி யையும் முன்னெடுத்தார். இதனை ஆக்கப்பூர்வ மாக பார்ப்பதாகவும் ராபர்ட் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா மீதான பைடனின் தடைகள் அந் நாட்டின் பொருளாதாரத்தை முடக்க தவறிவிட்டது. மாறாக ஆசிய நாடுகளை நோக்கி ரஷ்யாவின் சந்தையையும் பொருளாதாரத்தையும் விரிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.