போர் நிறுத்தம் குறித்து புடினுடன் டிரம்ப் பேச்சு
போர் நிறுத்தம் குறித்து புடினுடன் இன்று ( செவ்வாய்) பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். 30 நாட்களுக்கான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உக்ரைன் அமெரிக்காவிடம் ஒப்புதல் அளித்துள் ளது. அதன் பிறகு ரஷ்யாவுடன் அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்தியது. அது குறித்து முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை. எனினும் போர் நிறுத்த திட்டம் சரியானது. ஆனால் நீண்ட நாட்க ளுக்கான அமைதியை அது கொடுக்க வேண்டும் என புடின் கூறி இருந்தார். இந்நிலையில் இந்த உரையாடல் நடைபெறுகின்றது.
அமெரிக்காவில் புயல் 33 பேர் பலி
அமெரிக்காவின் பல மாநிலங்களில் ஏற்பட்ட புயலில் குறைந்தபட்சம் 33 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புயலால் மிசோரி மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் வீடுகள், தேவாலயங்கள் மற்றும் வணிகக் கடைகள் என 500 க்கும் மேற்பட்ட கட்டடங்கள் அழிந்துள்ளன. முதற்கட்ட மதிப்பீடுகளின்படி 29 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் 21 மாவட்டங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவும் தெரிவித்துள்ளனர்.
கேளிக்கை விடுதியில் தீ விபத்து 50க்கும் மேற்பட்டோர் பலி
வடக்கு மாசிடோனியாவில் இரவு நேர கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 59 பேர் உயிரிழந்துள்ளனர். 155 பேர் படுகாயமடைந்தனர். பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 02:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா மீதான தடைகளை நீக்க துருக்கி அழைப்பு
சிரியா மீதான தடைகளை “நிபந்தனையின்றி” நீக்க வேண்டும் என துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிரியாவில் அமைதியான மாற்றம் வேண்டும் என்றால் அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது “அத்தியாவசியமானது” என்று துருக்கி கருதுகிறது. சிரியாவின் பொருளாதார பாதுகாப்பு நாட்டின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு அவசியம் என குறிப்பிட்டுள்ளது.
பாலஸ்தீனர்களுக்கு உறுதியான ஆதரவை தொடர்வோம் – ஹவுதி
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைகளுக்கு எதிராக பாலஸ்தீன மக்களுக்கு எங்களுடைய ஆதரவும் நடவடிக்கையும் தொடரும் என ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா – இங்கிலாந்து கூட்டுப்படை ஏமன் தலைநகர் உட்பட பல நகரங்களில் தாக்குதல் நடத்தி 30 க்கும் மேற்பட்ட நபர்களை படுகொலை செய்த பிறகு ஹவுதி அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இனப்படுகொலைக்கு எதிரான போரட்டத்தில் பங்கேற்றதற்காக இந்திய மாணவி விசாவை ரத்து செய்த அமெரிக்கா
பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்றதற் காக அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இந்திய மாணவி ரஞ்சனி சீனிவாசனின் விசாவை ரத்து செய்து டிரம்ப் நிர்வாகம் பழி வாங்கியுள்ளது. விசா ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ரஞ்சனி தானாகவே அமெரிக்காவில் இருந்து வெளியே றிக்கொண்டார். இதனை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (டிஎச்எஸ்) உறுதி செய்துள்ளது. போதிய ஆவணங்கள் இன்றி அமெரிக்கா வில் குடியேறியுள்ள லட்சக்கணக்கான வெளி நாட்டினரை அமெரிக்கா வெளியேற்றி வரும் நிலையில், ஆவணமற்ற வெளிநாட்டினர் தாமாக வே நாட்டை விட்டு வெளியேற சுயமாகப் புகார ளிக்க ஒரு செயலி, அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் வடிவமைக்கப்பட்டது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி யில் பதிவு செய்து விட்டு தானாக முன்வந்து அமெ ரிக்காவை விட்டு வெளியேறியுள்ளார். இஸ்ரே லின் இனப்படுகொலையை எதிர்த்து நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் வெளிநாட்டி னர் மீது டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு கடுமையான ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்துள்ளது. இதற்காக ரஞ்சனி வன்முறை மற்றும் பயங்கர வாதத்திற்கு ரஞ்சனி ஆதரவானவர் என குற்றம் சாட்டினர். இதே போல 2024 ஏப்ரல் மாதம் கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு வெளியே பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடந்த போராட்டங்களில் கலந்து கொண் டதற்காக லேகா கொர்டியா என்ற பாலஸ்தீனப் பெண், விசா காலம் முடிந்த பிறகும் அமெரிக்காவில் இருந்தார் என கூறி கைது செய்யப்பட்டார்.
கொலம்பியா பல்கலை.க்கு நிதி கொடுக்காமல் தடுப்பு
இந்த நடவடிக்கை கொலம்பியா பல்கலைக் கழகத்திற்கு எதிராகவும் நடந்துள்ளது. இனப்படுகொலைக்கு எதிராக அப்பல்கலைக் கழகத்திற்கு வெளியே நடத்த போராட்டத்தை முறையாகக் கையாளவில்லை என குற்றம் சாட்டி பல்கலைக்கழகத்திற்கு கொடுக்க வேண்டிய சுமார் 400 மில்லியன் டாலர் நிதியை டிரம்ப் நிர்வா கம் தடுத்து விட்டது. இதனால் பல்கலைக் கழ கத்தின் ஆய்வுத்துறைகள் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்திக்கின்றன. இந்தியர்களை கையில் விலங்கிட்டு அமெ ரிக்கா அனுப்பிய போது அமைதியாக இருந்த பாஜக அரசு, தற்போது இந்திய மாணவியின் விசா ரத்து செய்யப்பட்டதற்கும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளது.