world

img

தீக்கதிர் உலக செய்திகள்

நவீன ஹிட்லர் டிரம்ப் :மக்கள் முழக்கம்

 வெள்ளை மாளிகை அருகே உள்ள உணவகம் ஒன்றுக்கு உணவருந்த சென்ற அமெரிக்க ஜனா திபதி டிரம்ப்பை பார்த்து  அங் கிருந்த மக்கள், பாலஸ்தீன த்தை விட்டு விடு, நவீன கால ஹிட்லர் என கோஷம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டிரம்ப் அமெரிக்காவை பாது காப்பதாகக் கூறி வெளிநாட்டி னரை நாட்டை விட்டு துரத்து வது உலக நாடுகளின் மீது வர்த்தகப்போரை நடத்து வது என செயல்பட்டு வருகிறார். இது அமெரிக்க நுகர்வோருக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இதனால் அம்மக்கள் டிரம்ப் மீது அதிருப்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாட்டிற்கு  புதிய பிரதமர்

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக செபஸ்டியன் லெகுர்னுவை அந்நாட்டு ஜனாதிபதி மக்ரோன் நிய மித்துள்ளார். கடந்த 2024 ஜூன் மாதம் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு மக்ரோன் தேர்தல் நடத்த உத்தரவிட்டார். அதில் கேப்ரியல் அட்டல் பிரதமரா னார். அவர் 2024 செப் டம்பரில் ராஜினாமா செய்த நிலையில், மைக்கேல் பார்னியர் பிரதமராக நியமிக்கப் பட்டார். அவர், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த நிலையில், மூன்றாவது பிரதமராக ஃபிரான்சுவா பேரூ பதவியேற்று அவரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வியடைந்துள்ளார்

தாய்லாந்து முன்னாள் பிரதமரை  சிறையில் அடைக்க உத்தரவு 

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ரா ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில் அவரை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பி க்கப்பட்டுள்ளது. ஊழல் வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக் கப்பட்டது. அது  அவருக்கு முறை யாக நிறைவேற்றப் படவில்லை என வழக்கு தொடரப் பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணையில் சிறை விதிமீறல் உறுதியானதால் மீண்டும் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியா, சீனா மீது அதிக வரி  விதிக்க ஐரோப்பாவுக்கு மிரட்டல்

இந்தியா, சீனா மீது 100 சதவீதம் வரை அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது. எனினும் இந்தியா மற்றும் சீனா ரஷ்யா வுடனான உறவுகளை தொடர்வதால் ஐரோப்பா மூலம் நெருக்கடி கொடுக்க திட்டமிட்டு வருகிறார் டிரம்ப்.

இஸ்ரேல் ஒரு கோழை : கத்தார் கண்டனம்

போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் அந்நாட்டின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. கத் தார் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கத் தார் தலைநகரில் ஹமாஸ் உறுப்பினர் கள் இருக்கும் கட்ட டங்களை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது. இது சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயல். இதனை கத்தார் வன்மை யாகக் கண்டிக்கிறது என குறிப்பிட்டுள்ளது.