மச்சோடாவை சந்திக்க உள்ளதாக டிரம்ப் அறிவிப்பு காரகஸ்/வாஷிங்டன்
,ஜன.12- வெனிசுலா எதிர்க் கட்சித் தலைவராக உள்ள அமெரிக்காவின் ஆதரவா ளரான மரியா கோரினா மச் சோடாவை டிரம்ப் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்நாட்டின் அதிகாரம் தன்னிடமே உள்ளது என பேசி வந்த டிரம்ப் தற்போது வெனிசுலாவின் செயல் ஜனாதிபதி என தனக்கு தானே அறிவித்துள்ளார். இச்சூழலில் தான் டிரம்ப்பை சந்திக்க மச்சோ டா அடுத்த வாரம் அமெ ரிக்கா செல்ல உள்ளார். டிரம்ப்பும் இதனை உறுதிப் படுத்தியுள்ளார். மச்சாடோ வைச் சந்தித்து வாழ்த்துக் கூற ஆவலாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
போரின் மீது விருப்பம் இல்லை ; ஆனால் தயாராகவே உள்ளோம்
டெஹ்ரான்,ஜன.12- ஈரானில் மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நிலைமை மோசமா னால் ராணுவ ரீதியான தாக்குதல் நடத்து வோம் என டிரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில் “ஈரான் போரை விரும்ப வில்லை, ஆனால் போருக்குத் தயாரா கவே உள்ளது” என்று அமெரிக்காவு க்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானில் நிலவி வரும் கடுமையான பொருளாதாரப் பிரச்சனைகள் காரண மாக, கடந்த ஒரு மாதமாக நாடு முழு வதும் போராட்டங்கள் நடைபெற்று வரு கின்றன. தற்போது நாட்டின் பல முக்கிய நகரங்களின் வீதிகளில் வெள்ளம் போல திரண்டு மக்கள் தீவிரமான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தைப் பயன் படுத்தி மத்திய கிழக்கில் தனது ஆதிக் கத்துக்கு எதிராக உள்ள ஒரே நாடான ஈரானில் எப்படியாவது ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தி விட வேண்டும் என அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தின் மொசாத் உளவுப்பிரிவும் இந்த நடவடிக்கையில் இணைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செய்தி யாளர் சந்திப்பின் போது, ஈரான் தலை வர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவ தாகவும், அதற்கான சந்திப்பிற்கு ஏற்பாடுகள் நடப்பதாகவும் கூறினார். இருப்பினும், நிலைமை மோசமானால் ராணுவ ரீதியான தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் என தொடர்ந்து மிரட்டி வருகிறார். போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டின் அனைத்து பகுதி களிலும் இணையச் சேவையை ஈரான் அரசு முடக்கியுள்ளது. எனினும் மீண்டும் இணைய சேவையை கொடுத்து அர சுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப் படுத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இதற்காக எலான் மஸ்கின் செயற்கைக் கோள் ‘ஸ்டார்லிங்க்’ நிறுவனத்தின் மூலம் இணைய சேவை வழங்க வலி யுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக எலான் மஸ்க் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி யை ஆதரிக்கும் வகையில் தனது எக்ஸ் சமூக ஊடகத்தில் ஈரானின் கொடியை மாற்றியுள்ளார். அமெரிக்க ஆதரவு மனித உரிமை அமைப்புகள் 48 ராணுவ வீரர்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் பலியாகி யுள்ளதாகவும், 10,600-க்கும் மேற் பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக வும் தெரிவித்துள்ளன. ஈரானின் எதிர்வினை அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் இந்தப் போராட்டங்களைத் தூண்டி விடுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவைக் கண்டித்து நாடு தழுவிய பேரணி நடத்தவும் ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகையில், “நிலை மை தற்போது முழுமையாகக் கட்டுப் பாட்டிற்குள் வந்துள்ளது. அமெரிக்கா தலையிடுவதற்காகவே இந்தப் போ ராட்டங்கள் வன்முறையாக மாற்றப் பட்டுள்ளன. ஈரான் போரை விரும்ப வில்லை, ஆனால் போருக்குத் தயாரா கவே உள்ளது,” என்று எச்சரித்துள்ளார். மேலும், “அமெரிக்கா தனது பொரு ளாதாரத் தடைகள் மூலம் ஈரான் மக்க ளைத் துன்புறுத்துகிறது. இது மனித நேயத்திற்கு எதிரான குற்றம்” என்று ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், போ ராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் அமெ ரிக்கா மற்றும் இஸ்ரேலின் தூண்டுத லால் வன்முறையில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார முடக்கம் கடந்த பல ஆண்டுகளாக அமெ ரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. குறிப்பாக டிரம்ப் முதல் முறை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது 2018 இல் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அந்நாட்டை விலக்கிக் கொண்டார். அதன் பிறகு ஈரானின் எண்ணெய் ஏற்று மதி மற்றும் மருந்து இறக்குமதி மீது கடும் தடைகளை விதித்தார். இதன் கார ணமாக எண்ணெய் வர்த்தகம், தொழில் நுட்பம் என அனைத்துத் துறைகளும் கடும் நெருக்கடியை சந்தித்து வரு கின்றன. ஆட்சிக் கவிழ்ப்பில் மன்னரின் மகன் அமெரிக்காவில் வசிக்கும் ஈரானின் முன்னாள் மன்னரின் மகன் ரேசா பஹ்லவி, ஈரான் ராணுவம் மக்களுடன் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் ஈரானுக்குத் திரும்பி வந்து ஆட்சியை அமைப்பேன் என அவர் கூறியுள்ளார். இந்தியர்கள் குறித்து விளக்கம் இதனிடையே, போராட்டங்களின் போது இந்தியர்கள் கைது செய்யப் பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிய நிலையில் இந்தி யர்கள் யாரும் கைது செய்யப்பட வில்லை என்று இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபதாலி உறுதிப் படுத்தியுள்ளார். இது தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் வதந்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
