world

img

தீக்கதிர் உலக செய்திகள்

பிரான்ஸ் பட்ஜெட்டுக்கு எதிராக  தொழிற்சங்கங்கள் போராட்டம்

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனின் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொழிற் சங்கங்கள் போராட்டம் நடத்தியுள்ளன. மக்கள் எதிர்கொள்ளும் பிரச்ச னைகளுக்கு தீர்வு தராத வகையில் கொண்டு வரப் படும் இப்பட்ஜெட்டுக்கு பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் மக்களை ஒன்று திரட்டி இப்போராட்டத்தை நடத்தி யுள்ளன. பொதுத் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக உள்ளது.  

போரை நிறுத்த வேண்டும்  இஸ்ரேலியர்கள் மனு  

காசா மீதான போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என 7,500-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கையெழுத்திட்டு மனு அளித்துள் ்ளனர். மேலும் இது தொடர்பான அறிக்கையை வரும் வாரம் நடைபெற உள்ள ஐ.நா. அவையில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை தாக்கு தலில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 65,000 ஐ தாண்டியுள்ளது. படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,65,697 ஆக அதிகரித்துள்ளது.