world

img

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியது அமெரிக்கா!

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து(WHO) அதிகாரப்பூர்வமாக நேற்று விலகியதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. 
கடந்த ஆண்டு டிரம்ப் ஜானாதிபதியாக பதிவியேர்ற முதல் நாளிலேயே நிர்வாக உத்தரவு மூலம் WHO-விலிருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அமெரிக்க சுகாதாரத் துறை மற்றும் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், WHO-வுடன் இனி மிகக் குறைந்த அளவிலேயே தொடர்பு இருக்கும் என்றும், பார்வையாளர் நாடாகவும் அமெரிக்கா தொடராது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நோய் கண்காணிப்பு உள்ளிட்ட பொதுச் சுகாதார பணிகளில், சர்வதேச அமைப்புகள் வழியாக அல்லாமல், நேரடியாக பிற நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
WHO தரப்பில், 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான கட்டணங்களை அமெரிக்கா இன்னும் செலுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலகல் விவகாரம் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள WHO நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.