world

img

தகுதியற்ற நபருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு இன்னொரு தகுதியற்ற நபருக்கு சென்றது

தகுதியற்ற நபருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு இன்னொரு தகுதியற்ற நபருக்கு சென்றது

வாஷிங்டன்,ஜன.16-  வெனிசுலாவின் எதிக்கட்சித் தலை வரும் டிரம்ப்பின் விசுவாசியுமான மரியா கொரினா மச்சாடோ  தனக்கு கொடுக்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை டிரம்ப்பிற்கு வழங்கி யுள்ளார். டிரம்ப்பும் அதனை எந்த ஒரு குற்ற உணர்வமின்றி ஏற்றுக் கொண்டுள்ளார்.  மச்சாடோ வெனிசுலாவில் உள்ள இடதுசாரி அரசை கவிழ்ப்பதற்காக தொடர்ந்து அமெரிக்காவுக்கு உதவி செய்து வருபவர். அமெரிக்காவும் அவருக்கு பல கோடி டாலர்கள் நிதி கொடுத்து உதவி செய்து வருகிறது. தன் நாட்டின் மீது அமெரிக்க ராணு வம், இஸ்ரேல் ராணுவம் போர் தொடுக்க வேண்டும் என பகிரங்கமாக அழைப்பு விடுத்தவர். தனது நாட்டின் மீது அமெரிக்கா விதித்த பொருளா தாரத் தடைகளாலும், ராணுவத் தாக்கு தலாலும் சொந்த மக்கள் பலியான போதும் கூட அந்த தாக்குதலை வர வேற்றவர் தான் இந்த மச்சாடோ.  அதேபோல நான் சில நாடுக ளுக்கு இடையிலான போர்களை நிறுத்தியுள்ளேன். எனக்கு தான் அமைதிக்கான நோபல் வேண்டும் என டிரம்ப் மிரட்டல் விடுத்து வந்தார். ஆனால் காசா, உக்ரைன், சூடான் என உலகம் முழுவதும் போர்களால் மக்கள் சாவதற்கு காரணம் அமெரிக்கா தான். எனவே டிரம்புக்கு நோபல் பரிசு  தரக்கூடாது என எதிர்ப்புகள் கிளம்பின.  இந்நிலையில் மச்சாடோவுக்கு கடந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தரப்பட்டது. தனது நாட்டு மக்களின் உயிரை கூட மதிக்காத   ஒரு போர் வெறியருக்கு இந்த பரிசு  ஏன் கொடுக்கப்படுகிறது என கடும் விமர்சனங்கள் எழுந்தன. இச்சூழலில்  தான் பெற்ற நோபல் பரிசை கட்டாயம் டிரம்ப்புக்கு தருவேன் என மச்சாடோ கூறி  இருந்தார்.  வெனிசுலா ஜனாதிபதி மதுரோ வை அமெரிக்க ராணுவம்  கடத்தியுள்ள நிலையில் அந்நாட்டில் ஆட்சியை கவிழ்க்க டிரம்ப் திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில் தான்  ஜனவரி 15 வியாழக்கிழமையன்று  வெள்ளை மாளிகையில் மச்சாடோ டிரம்ப்பை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது  தனக்கு வழங்கப்பட்ட நோபல் அமைதிப் பரிசு பதக்கத்தை அவர் டிரப்பிற்கு வழங்கினார். நோபல் குழு தனது விதிமுறைக ளில், இந்தப் பரிசை “யாரோடும் பகிர்ந்து கொள்ளவோ அல்லது மற்ற வர்களுக்கு மாற்றவோ முடியாது” என்று ஏற்கெனவே தெளிவுபடுத்தி யிருந்த போதிலும், டிரம்ப் அந்தப் பரிசை ஏற்றுக்கொண்டதாகத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் உறு திப்படுத்தியுள்ளார். மதுரோவை கடத்திய பிறகு  டிரம்ப் மச்சாடோவிற்கு அந்நாட்டு மக்களிடம்  ஆதரவு இல்லை என விமர்சித்திருந்தார். இந்நிலையில் தன்னை டிரம்ப்  ஓரங்கட்டிவிட்டார் எனவும் அவரது ஆதரவைப் பெற்றே ஆகவேண்டும் என்ற அடிப்படையி லேயே  தனது நோபல் பரிசு பதக்கத்தை அவருக்கு மச்சாடோ வழங்கியதாகக் கூறப்படுகிறது.  இதனை உறுதி செய்யும் வகையில்  மச்சாடோ வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதாலேயே டிரம்ப் அந்தப் பதக்கத்தை ஏற்றுக் கொண்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.