world

img

நேபாள மாவோயிஸ்ட் கட்சி உட்பட ஏழு கட்சிகள் ஒன்றிணைய ஒப்பந்தம்

நேபாள மாவோயிஸ்ட் கட்சி உட்பட ஏழு கட்சிகள் ஒன்றிணைய ஒப்பந்தம்

காத்மாண்டு,நவ.4- நேபாளத்தில் இடைக்கால அரசு நாடாளுமன்ற தேர்தல் நடத்த உள்ள நிலையில் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹால் (பிரச்சந்தா) தலைமையிலான சி.பி.என் (மாவோயிஸ்ட் மையம்) உட்பட  நேபாளத்தில் உள்ள ஏழு கட்சிகள் (ஏற்கெனவே பிளவு பட்ட சிறு கட்சிகள்) ஒன்றிணைய ஒப்பந்தம் மேற் கொண்டுள்ளன.   இந்த புதிய கட்சியின் பெயர் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (சோசலிஸ்ட்) என இருக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.  இந்த ஒப்பந்தத்தில் அந்நாட்டின் மிகபெரும் கட்சியாக உள்ள கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூ னிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்) இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேபாளத்தில் 2025 செப்டம்பர் மாதம் இளம் தலைமுறையினர் (Gen Z)  நடத்திய பெரும் போராட்டத்தை தொடர்ந்து  அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப் பட்டது. பிரதமர் கே.பி. சர்மா ஒலி உட்பட அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  அதன் பிறகு இடைக்கால பிரதமராக அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுசீலா கார்க்கி பதவி ஏற்றார். அதன் பிறகு 2026 மார்ச் 5 அன்று நேபாள பிரதிநிதிகள் சபைத் தேர்தல் (நாடாளுமன்றத் தேர்தல்) நடத்தப்படும் என்று அந்நாட்டு ஜனாதிபதி ராம்சந்திர பௌடல் செப் 13 அன்று அறிவித்தார்.  இந்நிலையில் தேர்தலில் இடதுசா ரிகள் தனித்தனியாக போட்டியிடும் போது அது வாக்குகள் சிதறும். இந்த நிலை அந்நாட்டில் ஜனநாயகக் குடியரசு முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மீண்டும் மன்னராட்சி கொண்டு வரப்பட வேண்டும் என கோரிக்கைகளை முன்னெடுத்து வரும் பிற்போக்கு வலதுசாரிகளும் இந்துத்துவா அமைப்புகளும் வெற்றி பெற வாய்ப்பை ஏற்படுத்திவிடும். இது அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் தெற்காசிய நாடுகளின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பையும் உரு வாக்கும். எனவே  பிற்போக்குவாதிகள் வெற்றியடைய இடமளிக்கக் கூடாது என கருத்துகள் எழுந்து வந்தன.  இந்நிலையில் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹால் (பிரச்சந்தா) தலை மையிலான சி.பி.என் (மாவோயிஸ்ட் மையம்) உட்பட நேபாளத்தில் உள்ள ஏழு கட்சிகள், மார்ச் 2026 தேர்தலுக்கு முன்னதாக ஒருங்கிணைந்த புதிய கட்சியை உருவாக்குவதற்காக 18 அம்ச ஒப்பந்தத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ.2) இரவு காத்மண்டுவில் கையெ ழுத்திட்டுள்ளன.   அந்த ஒப்பந்தத்தில் “கட்சியின் வழி காட்டி சித்தாந்தமாக மார்க்சியம்-லெனி னியம் இருக்கும். மேலும் அதன் உடனடி உத்தியானது, மக்கள் ஜனநாயகப் புரட்சி யின் வெற்றிகளைப் பாதுகாப்பதிலும், சோசலிசத்திற்கான அடித்தளத்தை அமைப்பதிலும் கவனம் செலுத்தும். சூழ்நிலைக்கு ஏற்ப மக்கள் மத்தியிலும், நாடாளுமன்றம் மற்றும் அரசாங்க முன்னணிகள் என அனைத்துத் தளங்களிலும் அமைதியான முறையில் போராட்டம் தொடரும் என்பதை ஒரு அம்சமாக இணைத்துள்ளனர்.  இந்த ஒப்பந்தத்தில் பிரச்சந்தா தலை மையிலான சி.பி.என் (மாவோயிஸ்ட் மையம்), சி.பி.என் (ஐக்கிய சோசலிஸ்ட்), நேபாள சோசலிஸ்ட் கட்சி, சி.பி.என் (சோசலிஸ்ட்), ஜன சமாஜ்வாதி கட்சி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோ யிஸ்ட்–சோசலிஸ்ட்), பிப்ளவ் தலைமையி லான கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்த சி.பி.என் (சம்யாவதி) சிரான் பிரிவும் இதில் உள்ளது. தற்போதைய நேபாள அரசியல் சூழலில் பல இடதுசாரிப் பிரிவுகளை இணைப்பதன் மூலம், இந்த ஒருங்கி ணைந்த கட்சி மூலம் வாக்குகள் சிதறு வதைத் தவிர்த்து தமது  வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்க பிரச்சந்தா இவ்வாறான நடவடிக்கையை முன்னெ டுப்பதாகக் கூறப்படுகிறது.