world

img

தீக்கதிர் உலக செய்திகள்

‘டொமாகாக் ஏவுகணைகளை  உக்ரைனுக்கு வழங்கும் திட்டமில்லை’

ரஷ்யாவின் எல்லைக்குள் 2,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் சக்தி கொண்ட  டொமாகாக் ஏவுகணைகளை உக்ரைனுக்கு தருவேன் என சில வாரங்களுக்கு முன் டிரம்ப் மிரட்டல் விட்டிருந்தார். நேட்டோ நாடுகளுக்கு அந்த ஏவுகணைகளை விற்பனை செய்து அந்நாடுகள் மூலமாக உக்ரைனுக்கு கொடுக்க அவர் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் உக்ரைனுக்கு அந்த ஏவுகணைகளை கொடுப்பதற்கு வழிவகுக்கும் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த தான் பரிசீலிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தெற்கு காசாவில்  இஸ்ரேல் குண்டு வீச்சு  

தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் குண்டு வீசியுள்ளது. இதே போல ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதி யிலும் தாக்குதல் நடத்தியது. இதில்  2 பாலஸ் தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் அம லான பிறகு இஸ்ரேல் பல முறை ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது. தற்போதைய போர் நிறுத்தம் அமலான பிறகு குழந்தைகள், பெண்கள் என இதுவரை 236 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சூடான் துணை ராணுவத்துக்கு  அரபு அமீரகம் உதவுகிறது 

சூடானின் வடக்கு டார்பூர் மாநிலத்தில் துணை ராணுவம் போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது என எகிப்தில் உள்ள சூடான் தூதர் முஸ்தபா அடாவி குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் அந்த இராணுவம் கைப்பற்றிய எல்-ஃபாஷர் நகரிலிருந்து தப்பிக்க முயன்றவர்களை துணை ராணுவம் கும்பல் படுகொலை, பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. சூடானின் உள்நாட்டுப் போரில் துணை ராணுவத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் உதவுகிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க பிளாக்வெல் சிப்கள் வெளிநாடுகளுக்கு கிடைக்காது

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் என்விடியா நிறுவனம் ‘பிளாக்வெல்’ என்ற நவீன சிப்பை உருவாக்கியுள்ளது. இது அந்நிறு வனத்தின் முந்தைய சிப்களைக் காட்டிலும் 10 ஆண்டுகள் மேம்பட்ட மாதிரி ஆகும். இந்த சிப்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படாது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.  இந்த அறிவிப்பு அந்நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளராக உள்ள சீனாவை மையப்படுத்தியே அறி விக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. 

பிரிட்டனில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது கத்திக்குத்து  

பிரிட்டனில் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்த ஒருவர் சக பயணிகள் மீது திடீரென கத்தியால் சரமாரியாக குத்தி தாக்குதல் நடத்தியுள்ளார். பயணிகள் கொடுத்த தகவல் அடிப்படையில் இடையில் ரயில் நிறுத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இரண்டு பயணிகளின் நிலைமை கவலைக்கிட மாக உள்ளது.