அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் போர் நிறுத்தத்திற்காக ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இடமில்லை என கமலா ஹாரிஷ் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற நேர்காணலின் போது உக்ரைன் போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு போர் நிறுத்தத்திற்காக நான் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன். அதை உக்ரைன் தான் முடிவு செய்ய வேண்டும் என குறிப் பிட்டுள்ளார்.