செவ்வாய் கிரகத்தில் ஏப்ரல் 8- ஆம் தேதிக்குள் ”இன்ஜெனுயிட்டி” ஹெலிகாப்டர் பறக்க விடப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த ஆண்டு ஜீலை மாதம் செவ்வாய் கிரகத்திற்கு உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சிக்காக பெர்சவரன்ஸ் ரோவர் என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த ரோவர் விண்கலம் கடந்த மாதம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது.
வழக்கமாக விண்வெளிக்கு செல்லும் விண்கலம் ,அங்கு படம் பிடித்தும் . மாதிரிகளை சேகரிக்கும். ஆனால், தற்போது அனுப்பட்டுள்ள விண்கலத்தில் சிறிய ஹெலிகாப்டரும் சென்றுள்ளது.
இந்த ஹெலிகாப்டருக்கு ”இன்ஜெனுயிட்டி” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உயிரினங்கள் இருந்ததா என்று ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் ”இன்ஜெனுயிட்டி ஹெலிகாப்டர் ஏப்ரல் 8 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் பறக்க விடப்படும் என்று நாசாவின் அறிவியல் இயக்குனர் பாபி பிரவுன் தெரிவித்தார்.
விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்களின் முதல் விமானத்தின் ஒரு பகுதியை இன்ஜெனூட்டி ஹெலிகாப்டரில் நாசா இணைத்து உள்ளது. மேலும், நாசா ஆய்வுக்காக மற்ற கிரகத்தில் ஹெலிகாப்டர் பறக்க விடுவது முதன் முறையாகும்