பொதுத்துறைகளுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தி நியூசிலாந்தில் லட்சம் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்
வெலிங்டன்,அக்.23- நியூசிலாந்தில் அக்டோபர் 23 வியாழ னன்று அரசாங்கத்தை கண்டித்து சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் தொழிற்சங்கங்களின் தலைமையில் போராட் டம் நடத்தியுள்ளனர். நியூசிலாந்தில் உள்ள வலதுசாரிக் கூட்டணி அரசானது பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவையான நிதிகளை ஒதுக்காமல் உள்ளது. மேலும் ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த குறை ந்தபட்ச நிதியையும் தொடர்ந்து வெட்டி வரு கிறது. மேலும் வேலையின்மை அதிகரித்துள் ளதால் வாழ்வாதாரத்தை தேடி ஆண்டு தோறும் நியூசிலாந்தைவிட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் போதிய ஊதிய உயர்வு உள்ளிட்ட தொழிலாளர்கள் நலன் சார்ந்த கோ ரிக்கைகளையும் அரசு புறக்கணித்து வரு கிறது. இதனால் அந்நாட்டின் பெருவாரியான துறைகளில் உள்ள தொழிலாளர்கள் அரசாங் கத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் ஆசிரியர், செவிலியர், மருத் துவர், தீயணைப்பு வீரர்கள் உட்பட பல துறை களை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் வியாழக்கிழமையன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுத்துறைகளை அரசாங்கம் பாது காக்க வேண்டும், அதற்கு போதிய நிதியை ஒதுக் கீடு செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாழ்க்கைச் செல வுகளை குறைப்பதாகக் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மருத்துவம் மற்றும் கல்விக்கான நிதிகளும் தொடர்ந்து வெட்டப் பட்டு வருகிறது. இது வாழ்க்கைச் செலவுகளை முன்பை விட மிக மோசமாக்கியுள்ளது. இந்த நிதி வெட்டின் காரணமாக இத்துறைக ளில் ஊழியர்களை தக்கவைத்து மேம்படுத்த முடியவில்லை. இதனால் திறன் வாய்ந்த ஊழி யர்களை உருவாக்க முடியாமல் போகிறது. இது எதிர்காலத்தை மோசமாக்குகிறது என போராட் டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.