world

img

தீக்கதிர் உலக செய்திகள்

உலக சுகாதார அமைப்பில்  இருந்து விலகியது அர்ஜெண்டினா 

அர்ஜெண்டினா அரசு உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) விலகுவ தாக அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதி பதி டிரம்ப் கடந்த மாதம் உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதாக அறி வித்ததை தொடர்ந்து தங்கள் நாடும் விலகுவ தற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அர்ஜெண்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலெய் தெரிவித்திருந்தார். அதன் பிறகு சில நாட்க ளிலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது.இந்த முடிவிற்கு  சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நஸ்ரல்லாவை படுகொலை செய்ய  80 டன் வெடிகுண்டு வீசப்பட்டது

ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை படுகொலை செய்ய 80 டன் வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டது. அந்த தாக்குதலுக்கு முன் ‘எத்தனை டன் வெடி குண்டுகளை பதுங்கு குழி மீது வீசத் திட்டமிடுகிறீர்கள்? என கேள்வி எழுப்பினேன்.  40 டன் எனவும் தாக்குதல் வெற்றி பெற 90 சதவீதம் வாய்ப்புள்ளது எனவும் கூறினார்கள். நான் 80 டன் வெடிகுண்டு வீசுங்கள் வெற்றி வாய்ப்பு 99 சதவீதம் கூடும் என சொன்னேன் என்று இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட் பேசியுள்ளார்.

பாலஸ்தீன இன அழிப்புக்கு  தயாராகும் இஸ்ரேல் 

காசாவில் உள்ள பாலஸ்தீனர்களை வெளியே துரத்த இஸ்ரேல் ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என நேதன்யாகு அறிவித்துள்ளார். பாலஸ்தீனர்களை காசாவில் இருந்து வெளியேற்றி அப்பகுதியை ஆக்கிர மிப்பேன் என டிரம்ப் அறிவித்த பிறகு அதனை வரவேற்று நியாயப்படுத்திய பிறகு இந்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் நேதன்யாகு. மேலும் பாலஸ்தீன நாட்டை அமைக்க வேண்டும் என கூறிய நாடுகள் வெளியேற்றப்படும் பாலஸ்தீனர்களை ஏற்றுக்கொள்ளுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டிரம்ப் அமெரிக்காவை ஆளத்தான்’  ‘உலகத்தை ஆள்வதற்கல்ல’-லூலா

டொனால்டு டிரம்ப் அமெரிக்காவை ஆள்வதற்காகத்தான் அமெரிக்க மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உல கத்தை ஆள்வதற்காக தேர்வு செய்யப்பட வில்லை. அந்நாட்டு தேர்தலை நான் மதிக்கி றேன். உலக நாடுகளுடன் அவர் நாகரீகமான உறவை பேண வேண்டும் என பிரேசில் ஜனாதிபதி லூலா விமர்சித்துள்ளார்.மேலும் ஜனநாயகத்தின் சின்னமாக தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் டிரம்ப் பல பகுதிகளை ஆக்கிரமிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இது அனைவரை யும் ஆத்திரமூட்டும் செயல் எனவும் விமர்சித்தார்

பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கையில்  12 பயங்கரவாதிகள் பலி 

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அந்நாட்டு ராணுவம்  நடத்திய தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர்.  பிப்ரவரி 5-6 இரவுகளில் நடந்த இந்த தாக்குதலில்  ஒரு ராணுவ வீரரும் பலியாகியுள்ளதாக  பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித்தொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் பிரிவினைவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.