தென்காசி, பிப் .7 தென்காசி மாவட்டத்தில் சாம்பவார் வடகரையில் 8 குடும்பங் களை சேர்ந்தவ ர்களை ஊரை விட்டு விலக்கி வைத்தல் எனும் கொடுமை அரங்கேறியுள்ளது. தமிழகத்தில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களும், ஆண வக் கொலைகளும், அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் சாம்பவார் வடகரையில் வெங்கடேஷ் என்பவர் ஊர் நாட்டாமையாக உள்ளார். சட்டத் திற்கு அப்பாற்பட்டு ரேஷன் அரிசியை வாங்கி, விற்பனை செய்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த, அதே சமூகத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு சொந்த மான இடத்தை, விக்னேஷின் சித்தப்பா போலியாக பத்திரப்பதிவு செய்து கொண்டிருக்கிறார். இதனை விக்னேஷ் மற்றும் முருகன் தட்டி கேட்டுள்ளனர். அதனால் அவர்கள் இருவரது குடும்பம், அதோடு அரிசி கடத்தலுக்கு துணை போகாத குடும்பங்கள் என 8 குடும்பங்களை, கடந்த 10 மாதங் களாக, ஊரை விட்டு விலக்கி வைத் துள்ளனர் நாட்டாமை வெங்கடேஷ் மற்றும் ஊரார். சமீபத்தில் இறந்த முருகனின் தாயார் இறுதி சடங்கிற் கும் ஊர் பொதுமக்களை கலந்து கொள்ள விடாமல் ரகளை யில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அடுத்து அப்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு தகவல் கிடைத் ததும், அவர்கள் உடனடியாக அங்கு சென்று விசாரித்து காவல் துறை அதிகாரி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். ஆயினும்அந்த நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் சிபிஎம் உறுப்பி னர்கள் பிப்.11 அன்று போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து வால்போஸ்டர் ஓட்டினர். இதை அடுத்து 7 ஆம் தேதி மாலை 5 மணியளவில் காவல்துறை காவல் ஆய்வாளர் கவிதா, சிபிஎம் தென்காசி வட்டார செயலாளர் பட்டாபிராமன், மாவட்டச் செய லாளர் உச்சிமாகாளி, பகுதிச் செய லாளர் ஐயப்பன் ஆகியோரை அழைத்து போராட்டத்தை கை விடுமாறும் சுமூக பேச்சு வார்த் தைக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். இதையடுத்து சிபிஎம் உறுப்பினர்கள் 10ஆம் தேதிக்கு முன்னர் தீர்வு எட்டப்படவில்லை என்றால் சிபிஎம் சார்பில் கட்டாயம் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.