மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்.2 முதல் 6 வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி தென்சென்னை மாவட்டத்தில் வியாழனன்று (பிப்.6) நடைபெற்ற வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் பகுதிக்குழுக்கள், இடைக்குழுக்கள், சிறப்புக் கிளைகள் சார்பில் முதற்கட்டமாக நிதியாக 13.46 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், வரவேற்புக்குழு தலைவர் க.பீம்ராவ், மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.