tamilnadu

img

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; இன்று வாக்கு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமையன்று காலை 7.30 மணிக்கு துவங்குகிறது.

இதற்கான முழு ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் ராஜ கோபால் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘’ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 246 அஞ்சல் வாக்குகள் பதிவாகியுள்ளன; காலை  7:30 மணிக்கு அஞ்சல் வாக்கு பெட்டிகள் திறக்கப்படும்; எட்டு மணி முதல் அஞ்சல்  வாக்குகள் எண்ணப்படும்; அதைத்தொ டர்ந்து, 14 மேஜைகளில் 17 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒரு சுற்றுக்கு 25 நிமிடங்கள் வரை ஆகலாம்’’ என்று ராஜகோபால் தெரிவித்துள்ளார். இதனால், பிற்பகல் 1 மணிக்கு முழு முடி வும் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த 2024 டிசம்பர் 14 அன்று உடல்நலக்குறைவு காரணமாக உயி ரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு  தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டு, பிப்ரவரி 5 அன்று வாக்குப்பதிவு நடை பெற்றது. 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 பேர்  வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 67.97 சதவிகித வாக்குகள் பதிவாகின.

இத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் போட்டியிட்ட நிலையில், பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக கட்சிகள் தாங்கள் ஒதுங்கிக்  கொண்டு, அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி  என்ற வகையில் நாம் தமிழர் கட்சியை களத்தில் இறக்கி விட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.