world

img

தீக்கதிர் உலக செய்திகள்

வெறுப்பைத் தூண்டுபவர்களை  தண்டிக்க சட்டம் 

ஆஸ்திரேலியாவில் வெறுப்புகளை தூண்டும் குற்றங்களுக்கு எதிராக கடுமையான  சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள் ளன. நாஜி சல்யூட் செய்வது உள்ளிட்ட பயங்கர வாத குற்றச் செயலுக்கு தண்டனை கொடுக்கும் வகையில் இந்த சட்டங்கள் உரு வாக்கப்பட்டுள்ளன. குறைந்த பட்சம்  12 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், பயங்கர வாத குற்றங்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆறு வருடங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும்  சாட் ஜிபிடி முடங்கியது 

ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவான (AI) சாட் ஜிபிடி   (Chat GPT) வியாழனன்று திடீரென்று உலகம் முழுவதும் முடங்கியது. இதுபோன்ற ஆன் லைன் செயலிழப்பு / முடக்கங்களை கண்கா ணிக்கும் தளமான டவுன்டெக்டர் என்ற அமை ப்பு இந்த முடக்கத்தால் ஆயிரக்கணக்கான பய னர்கள் பாதிப்பை சந்தித்துள்ளனர் என தெரி வித்துள்ளது. சாட் ஜிபிடி செயலி முடக்கம் மட்டு மின்றி அதனை பயன்படுத்துவதில் சில சிக்கல் களும் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிரம்ப்பின் இன அழிப்புத் திட்டத்தில்  தவறு இல்லை : நேதன்யாகு

பாலஸ்தீனர்களை காசாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என டொனால்டு டிரம்ப் சொன்னதில் எந்த தவறும் இல்லை என பெஞ்சமின் நேதன்யாகு கூறியுள்ளார். டிரம்ப் மற்றும் நேதன்யாகு சந்தித்தபோது நடந்த செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் தெரிவித்த அக்கருத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, காசாவில் இருந்து வெளியேற விரும்பும் பாலஸ்தீனர்களை நாங்கள் வெளியேற்றுவோம் என நேதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார்.

ஷேக் முஜிபுர் ரஹ்மானின்  பாரம்பரிய வீடு தீக்கிரை

வங்கதேசத்தின் நிறுவனர் என அழைக் கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பாரம் பரிய வீடு சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள் ளது. முஜிபுர் ரஹ்மானின் வீட்டை சூறையாடிய போராட்டக்காரர்கள், ஒரு கட்டத்தில் தீயிட்டு கொ ளுத்தினர். நாட்டு மக்களுக்காக புதனன்று இரவு காணொலி மூலம் உரையாற்றிய ஷேக் ஹசீனா இது குறித்து தனது கவலைகளை வெளிப்படுத்தி னார். மேலும் வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன் சுதந்திர வங்கதேசத்தை கட்டமைத்தவ ரின் கடைசி தடயமும் எரிந்து சாம்பலாகிவிட்டது என தனது எக்ஸ் கணக்கில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அதிகரிக்கும்  உலக வெப்பநிலை 

2025 ஜனவரி மாதம் பூமியின் சராசரி வெப்ப நிலை உலகம் முழுவதும் 0.79 டிகிரி செல்சி யஸ் அதிகரித்துள்ளது என கால நிலை மாற்ற கண்காணிப்பு அமைப்பு  கோபர்நிக்கஸ் அறி வித்துள்ளது. தொழில்மயக்  காலத்துக்கு முந்தைய வெப்பநிலையை விட 1.75 டிகிரி செல்சியஸ் அதிக ரித்துள்ளது. இந்த அளவு ஐரோப்பிய நாடுகளில் கிட்டத்தட்ட 2.51 டிகிரி  செல்சியஸ் வரை உயர்ந்துள் ளது. ஐரோப்பா மட்டுமின்றி  வடகிழக்கு -வடமேற்கு கனடா, அலாஸ்கா, சைபீரியா, தென் அமெரிக்கா, ஆப் பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் வெப்ப நிலை சராசரியை விட அதிகமாக பதிவாகியுள்ளது.