articles

img

இந்திய மக்கள் இதை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்

இந்திய மக்கள் இதை  பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்

கருத்தியல் ரீதியாகவும், ராஜீய ரீதியாகவும் தன்னுடைய நெருங்கிய கூட்டாளியான டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதி பதியாக பொறுப்பேற்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 12ஆம் தேதி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா  செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அமெரிக்காவில் அவருக்கு தடபுடலான விருந்து அளிக்கப்படக் கூடும். டிரம்ப் ஜனாதி பதியாக பொறுப்பேற்றவுடன் முந்திக் கொண்டு முதலில் வாழ்த்துச் சொன்னவர் நரேந்திர மோடி. அதற்கு நெகிழ்ந்து நன்றி சொன்னார் டிரம்ப்.

ஆனால் சட்ட விரோதமாகக் குடியேறிய வர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட இந்தியர்க ளை அமெரிக்காவின் டிரம்ப் அரசு மிருகத்தன மாக நடத்தும் விதம் குறித்து பிரதமர் மோடி கண்ட னம் தெரிவிக்கவில்லை என்பது மட்டுமல்ல, இந்திய அயல்துறை ஒரு முணுமுணுப்பைக் கூட வெளிப் படுத்தவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்திய குடிமக்களை அமெரிக்கா நாடு கடத்து வது என்கிற பெயரில் காட்டுமிராண்டித்தனமாக நடத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பெரும் புயலை கிளப்பியுள்ள னர். நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். 

டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப் பேற்ற பிறகு பல்வேறு விபரீதமான அறிவிப்பு களை வெளியிடுவதோடு மட்டுமின்றி அதை மூர்க்கத் தனமாக நடைமுறைப்படுத்தவும் துணிந்து விட்டார். அதில் ஒன்றுதான் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை வெளி யேற்றுவது என்பது ஆகும்.

உண்மையில் அமெரிக்கா என்பது செவ்விந் தியர்கள் என அழைக்கப்பட்ட பூர்வ குடிகளின் பூமியாகும். வெள்ளையர்கள்தான் அங்கு சட்ட விரோதமாக குடியேறியதோடு பூர்வகுடி மக்களை யும் வேட்டையாடினர். இது ஒருபுறமிருக்க, போதிய ஆவணங்களின்றி தங்கியிருப்பதாக நாட்டை விட்டு வெளியேற்றுவதாக இருந்தாலும் அதற் கென சில நெறிமுறைகள் உண்டு.

போர்க் கைதிகளைப் போல, ராணுவ விமானத் தில் ஏற்றி கை, கால்களை கட்டி சங்கிலியால் பூட்டி, உணவருந்தும் போதும், கழிவறைக்கு செல்லும் போதுகூட கை விலங்குகளை அகற்றாமல் மிருகத் தனமாக இந்தியர்களை நடத்தியுள்ளது டிரம்ப் நிர்வாகம். இதுகண்டு அமெரிக்காவில் இருக்கும் சுதந்திர தேவியின் சிலையே வெட் கப்பட்டு கண்ணீர் வடித்திருக்கும். 

சொந்த நாட்டு மக்களை இவ்வாறு நடத்துவது குறித்து டிரம்ப் நிர்வாகத்திடம் மோடி அரசு தன்னுடைய ஆட்சேபணையை தெரிவிக்கக் கூட தயங்குவது ஏன்? இந்தியாவுக்கான அமெரிக்க தூதரை அழைத்து வெளிப்படையாக கண்டித்திருக்க வேண்டும் அல்லவா? இந்தி யாவை அமெரிக்காவின் இளைய பங்காளி யாக மாற்றிய மோடி அரசு அமெரிக்க வல்லாதிக் கத்தின் அடிமை போலவே நடந்து கொள்கிறது. ஆனால் இந்திய மக்கள் இதை சகித்துக் கொள்ள மாட்டார்கள்.