புதுதில்லி, பிப். 6 - பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) புதிய விதிமுறைகள் அடங்கிய வரை வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக மாண வர் அணி சார்பில் தில்லி ஜந்தர் மந்தரில் புதனன்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., உட்பட, ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்திய மாணவர் சங்கம் (SFI) உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்பு களைச் சேர்ந்த மாணவர்களும் போராட்டத் தில் திரளாக கலந்து கொண்டனர். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் எம்.பி., “அரசியல்வாதிகளை, தொழிலதிபர்களின் பணியாளர்களாக பாஜகவும் ஆர்எஸ்எஸ்-சும் மாற்றப்பார்க்கின்றன.
புதிய கல்விக் கொள்கையை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இங்கே இருக்கும் அனைத்து மாணவர்களையும், நீங்கள் எடுத்துள்ள முடிவினையும் நான் ஆதரிக்கி றேன். நான் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக உள்ளேன்” என பேசினார்.
இதனிடையே, திமுக மாணவர் அணி யின் போராட்டம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தலைநகர் தில்லியில் யுஜிசி வரைவு நெறிமுறைகளை எதிர்க்கும் போராட்டத்தில் மாணவர்களின் குரலை வலுப்படுத்தியதற்காகவும், கல்வி யின் எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தோள் கொடுத்தமைக்காகவும் நமது கழக மாண வரணியினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சகோதரர்கள் ராகுல் காந்தி, அகி லேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்களுக்கு எனது நன்றிகள். இன்று தலைநகரில் முழங்கிய நம் குரல் இந்தியாவெங்கும் எதிரொலிக்கும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கு 4000 வருட வரலாறு
போராட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதற்கென சொந்தமான பாரம்பரியம், வரலாறு, மொழி உண்டு. அதனால்தான் நமது அரசியலமைப்பு, இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று அழைக்கிறது என்று நான் அடிக்கடி சொல்கிறேன். தமிழ் மக்களுக்கு 4000 வருட வரலாறு இருக்கிறது. அதே போல தொன்மையான மொழியும் பண்பாடும் இருக்கிறது. யுஜிசி புதிய நெறிமுறைகள் வெறும் கல்வி சம்பந்தப்பட்டது அல்ல. அது மொழி, பண்பாடு ஆகியவற்றின் மீது ஆர்எஸ்எஸ் தொடுக்கும் தாக்குதல். அது தான் அதன் துவக்கப்புள்ளி. ஆர்எஸ்எஸ் தனது கருத்தான, ஒரு வரலாறு, ஒரு பாரம்பரியம், ஒரு மொழி என்பதை அடை வதற்காக அரசியலமைப்பை தாக்குகிறது. பிற பண்பாடுகளையும் வரலாறுகளையும் அழித்து ஒற்றைத் தன்மையை திணிப்பது தான் ஆர்எஸ்எஸ்-ஸின் லட்சியம். ஆர்எஸ்எஸ்ஸின் காலாவதியான சித்தாந்தம் திணிக்கப்படுவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்” என கூறினார்.